Pages

Tuesday, 17 March 2026

பதினெண் சித்தர்

சித்தத்தில் இறைவனைக் கண்டவர் சித்தர். 
சித்தத்தை இறைவனாகப் பார்ப்பவர் சித்தர் எனலுமாம். 

இறைவனை அறிவு (வாலறிவு) என்றும், மனம் (மலர்மிசை ஏகினான்) என்றும் வள்ளுவர் கண்டார். 

மனம் பலப்பல சித்து வேலைகளைச் செய்கிறது. 
அவை சித்து விளையாட்டுகள். 
அதனால் மனம், (மனத்தில் மலரும் எண்ணம்)சித்தம்’ எனப்பட்டது.  

💚

18 சித்தர்

  1. திருமூலர்
  2. இராமதேவர்
  3. கும்பமுனி (அகத்தியர்)
  4. இடைக்காடர் 
  5. தன்வந்திரி
  6. வால்மீகி
  7. கமலமுனி
  8. போகநாதர்
  9. மச்சமுனி
  10. கொங்கணர் 
  11. பதஞ்சலி
  12. நந்திதேவர்  
  13. பாம்பாட்டிச் சித்தர் 
  14. சட்டைமுனி
  15. சுந்தரானந்த தேவர்
  16. குதம்பைச் சித்தர் 
  17. கோரக்கர்
  18. ரோமரிஷி
ஆகியோர் 18 சித்தர்கள் எனப் போற்றப்படுகின்றனர். 

இந்த 18 பேர்தான் என்பதற்கு எந்தச் சான்றும் இல்லை. இங்குக் காட்டப்பட்டவர் கால வரிசையிலும் இல்லை. 

💚

சரவணமுத்துப் பிள்ளை


18 ஆம் நூற்றாண்டில் சரவணமுத்துப் பிள்ளை என்பவர் ஞானக்கோவை என்னும் நூலில் இவர்களின் பாடல்களைத் தொகுத்து வெளியிட்டார். அவரும் 18 பேர் என்று தொகுத்துக் காட்டவில்லை. 

அருள் சுரந்த சிவமுத்தர் 18 பேர் என்று அவர் குறிப்பிட்டு, மேலும் இருப்பின் தருக என அவர் வேண்டியுள்ளார். 

இவர் தொகுப்பில் உள்ளவை
  1. சிவவாக்கியம்
  2. பட்டினத்தார் பாடல், புலம்பல், ஞானம்
  3. பத்திரகிரி அருள் புலம்பல் 
  4. பாம்பாட்டீசர்
  5. இடைக்காடர் 
  6. அகப்பைச் சித்தர் 
  7. குதம்பை
  8. கடுவெளி சித்தர் 
  9. குருமுனிவர் 
  10. அழுகணி சித்தர் 
  11. நந்தீசர் 
  12. ராமதேவர் 
  13. கொங்கணவர் 
  14. ரோமநாதர்
  15. திருமூலர் 
  16. வருவூரார் 
  17. பொதிகைச் சித்தர்  
  • இந்தத் தொகுப்பில் காகபுருடர் பெயர் விடுபட்டுள்ளது. இதனைச் சோர்த்தால் 18 சித்தர்கள் ஆகும்.

திருவள்ளுவர் ஞானம் என்னும் பெயரில் பாடல்கள் இதில் சேர்க்கப்பட்டுள்ளன. இவை 17, 18 ஆம் நூற்றாண்டு ஞான வெட்டியான் என்னும் நூலில் உள்ளவை.


💚

சித்தர் கோவை பழைய நூல் அன்று. 3 பாகமாக இது உள்ளது. 
  1. சிவயோக சாரம்
  2. நிஜானந்த போதம் 
என்னும் உரைநடை நூல்களும் இதில் உள்ளன. 

இராமலிங்கசுவாமி  பாடல்களும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன. 
திருவள்ளுவர் ஞானம் என்னும் பெயரில் பாடல்கள் உள்ளன.
  1. உதளிகள்
  2. புண்ணாக்கீசர்
  3. பிரமமுனி
  4. வாசமுனி 
  5. அமலகுரு
  6. கமல முனிவர்
  7. நவநாத சித்தர்
  8. சுந்தரக் கடவுள் அடியார் 
  9. மலரக்கண் அடியார்
  10. இராய வேலூர் அமுத சித்தர்
ஆகியோர் பாடல்களும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன. 

💚

மேலும் சித்தர்
  1. அமுத சித்தர்
  2. பதஞ்சலி - ஞானநூல்
  3. தன்வந்திரி - கலைஞானம் 500, வைத்திய நிகண்டு 302, வைத்திய சிந்தாமணி 1200, சிமிட்டு ரத்தினச் சுருக்கம் 360, 
  4. புலிப்பாணி சித்தர் - சாலத் திரட்டு. பல கிரட்டு 500
  5. யோகி முனி - வைத்திய நிகண்டு
  6. கோரக்கர் - கோரக்கர் வைப்பு (கஞ்சா ஒரு மருந்து என்று கூறுபவர்) 
  7. வச்சமுனி - வைப்பு, வாத நிகண்டு. 
💚

ஞானக்கோவை என்னும் நூல் ஒன்று அடிப்படை இல்லாமல் தொகுக்கப்பட்டுள்ளது. இதில் தொகுக்கப்பட்டுள்ள சித்தர்கள் 

14 ஆம் நூற்றாண்டு
  1. சிவவாக்கியார்
  2. பட்டினத்தார் 
15 ஆம் நூற்றாண்டு
  1. அகப்பை
  2. அழுகணி
  3. இடைக்காடு
  4. கடுவெளி 
  5. குதம்பை
  6. பாம்பாட்டி
16 ஆம் நூற்றாண்டு
  1. காக புருடர்
  2. பொங்கணர்
  3. சூரியானந்தர்
  4. அகத்தியர் 
  5. உரோகரி ரிஷி
  6. சட்டைமுனி
  7. சுப்பிரமணியர்
  8. திருமூலர்
  9. திருவள்ளுவர் 
  10. வால்மீகர்
  11. இராமதேவர் 
  12. நந்தீசுரர் 
  13. கருவூரார்   
💚

மேலும் 
  1. பிரம முனி
  2. மச்ச முனி
  3. யூகி முனி
இவர்கள் 
  • வைத்தியம் 
  • இரசவாதம்
  • காயகற்பம்
துறை சார்ந்த பாடல்களைப் பாடியுள்ளனர்.

வரலாற்று அற்புதங்கள் \ மு அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, \16 ஆம் நூற்றாண்டு, பாகம் 3, பக்கம் 190

திருமூலம் பாடிய சித்தர்



No comments:

Post a Comment