Pages

Friday, 20 March 2026

ஆதிபகவன் யார்

ஆதிபகவன்



திருக்குறள் நமக்குப் புரியும் தமிழில் எழுதப்பட்டுள்ளது. 

சில தொடர்கள் புரியாமல் இருக்கலாம். 

அவற்றைப் புரிந்துகொள்ள அவற்றை அவர் பயன்படுத்தியுள்ள வேறு இடங்களைப் பார்த்தால் புரிந்துவிடும். 

இப்போது நாம்மிடம் செயற்கை நுண்ணறிவுக் கலை (AI Technology) இருக்கிறது. இதனை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். 

💧

ஆதி



ஆதி என்னும் சொல்லின் பொருள் புரியவில்லை என்றால் ஆதி என்னும் சொல்லைத் திருக்குறள் பயன்படுத்தியுள்ள வேறு இடங்களைப் பார்த்து ஒப்பிட்டுப் பார்த்துப் புரிந்துகொள்ள வேண்டும். 

அடுத்து, நம் மொழியறிவையும் பயன்படுத்த வேண்டும். 

அந்தணர் நூற்கும், அறத்திற்கும் ஆதியாய் நின்றது மன்னவன் கோல் – (திருக்குறள் 543) 

அரசாட்சி நம்மை எப்படிக் கட்டுப்படுத்துகிறது என்பதை நாம் அறிவோம்.

இதுதான் இந்தக் குறளில் சொல்லப்பட்டுள்ளது. 

நம்மைக் கட்டுப்படுத்தும் அந்த ஆதிதான் இறைவன். 

ஆட்சி என்பது காலத்தின் செயல்திறன். 

💧

பகவன் 



எட்பகவு அன்ன சிறுமைத்தே ஆயினும் உட்பகை உள்ளதாம் கேடு (திருக்குறள் 889)

எள்ளுக்குள் எண்ணெய் இருக்கிறது. 

எள் சிறியது. அதற்குள் இருக்கும் எள்ளின் பகவாகிய (பகுதியாகிய) எண்ணெய் அதனினும் மிகக் கொஞ்சம். 

இப்படி உருவாவும், தெரியாமலும் உட்பகை இருக்கும். 

எள்ளின் பகவாக எண்ணெய் இருப்பது போல் எல்லாப் பொருளிலும் இறைவன் பகவனாக இருக்கிறான். 

💧

ஆதிபகவன்



இறைவன் எப்படி இருக்கிறான் என்று வள்ளுவர் வாக்கின் வழி புரிந்துகொண்டோம். 

ஆதிபகவன் என்னும் தொடருக்கு வள்ளுவர் தரும் விளக்கங்கள் இவை. 

இவற்றை மேலும் எண்ணுவோம். 


 💧

திருக்குறள் சமயச் சார்பு இல்லாத நூல். 

💧

இறைவன் யார் எனக் காட்டி 
அவனை வணங்க வேண்டும்; 
தொழவேண்டும்; 
அவன் அடியைச் சேரவேண்டும்; 
அவன் புகழைப் போற்ற வேண்டும் என்று கூறுகிறது. 

💧

இறைவன் யார்


இறைந்து கிடப்பவன் இறைவன். 

இறைவன் உயர்திணை. 
இறை அஃறிணை. 
இறை வினைச்சொல். 

இறைதல் - தன்வினை; முதல் வேற்றுமைத் தொழிற்பெயர். 
இறைத்தல் - இரண்டாம் வேற்றுமைத் தொழிற்பெயர்.

💧

இறைவன் காலமாக இருக்கிறான். 
இடத்தை இயக்குகிறான். 
அவன் செயலைக் காலம் என்கிறோம். 

காலம் அவன் கையில் இருக்கிறது. 
செயலை இடப்பொருள்கள் செய்கின்றன. 

சுழல்கின்றன; சுற்றுகின்றன. 

இவற்றின் மையப்புள்ளியும், விசையும் அவன். 
விசையைத் தாங்கும் விண்ணும் அவன். 

இந்த உண்மையை 
உள்ளத்தில் வைத்துக்கொண்டு 
முதல் 10 குறள்களை 
அணுகவேண்டும். 

💧

இறைவன் 


  • ஆதிபகவன்
  • வாலறிவன் - உயிரினங்களின் அறிவாக இருப்பவன் 
  • மலர்மிசை ஏகினான் - நமக்குள் மலர்பவன்
  • வேண்டுதல் வேண்டாமை இலான் - நமக்கு இருக்கும் விருப்பு, வெறுப்பு அவனுக்கு இல்லை.
  • பொறிவாயில் ஐந்து அவித்தான் - நாம் ஐம்புல உணர்வோடு வாழ்கிறோம்; அவன் அந்த ஐம்புல உணர்வுகளை அவித்து (அவியலாக்கி) வைத்திருக்கிறான். 
  • அற ஆழி - அவன் அறநெறியாகச் சுழல்கிறான். 
  • எண் குணத்தான் - அவன் எண்ணமாகிய குணம். (மனம்) 

💧

எண்குணத்தான்


  • ஒப்பு நோக்குக
  • "எண்பொருளவாகச் செலச் சொல்லி" - சொல்லும் சொல் பிறரை எண்ணிப் பார்க்கும்படிச் செய்வதாக இருக்க வேண்டும். (திருக்குறள் 424)
  • "ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு எண்பொருள் ஏனை இரண்டும் ஒருங்கு" - புகழ் உண்டாக்கும் செல்வம் வயிரமாகி அழியாமல் இருக்கும் அளவுக்கு சேர்த்தவருக்கு கொடை வழங்கும் அறமும், இன்பம் துய்க்கும் பேறுமாகிய ஏனைய இரண்டும் தாமே  வந்து அவருக்கு அமைந்துவிடும். (திருக்குறள் 760)

💧

ஆதிபகவன்


பகவன் - பெயர்ச்சொல்
ஆதி - பெயரெச்சம்

💧

ஆதி


ஆகு - வினை
ஆனான், ஆயினான் - இறந்த காலம்
ஆகிறான் - நிகழ்காலம்
ஆவான் - எதிர்காலம்

ஆ (ஆகு, ஆவு) 

ஆதி காலம் 
ஆதி (கால) மனிதன்
இவற்றில் ஆதி என்னும் சொல் காலத்தை உணர்த்தும் அடைமொழி.

ஆதிபகவன் - என்பதிலும் ஆதி என்பது காலத்தை உணர்த்தும் அடைமொழி. 

💧

பகவன்


பகவன் = பகு +அன் -- பகவு + அன் -- எள் பகவு (திருக்குறள் 899)

பகு - வினை
பகவு - பெயர் 
பகவன் - வினைப்பெயர்

💧

இந்த விளக்கங்களால் நாம் அறிவது என்ன? 


ஆதி என்பது காலம்
அது வெட்டவளி
ஆற்றல் வெளி
சத்தி (சக்தி, சத்து)

பகவன் என்பது இடப்பொருள்

ஆதிபகவன் என்பது 
காலமாகவும் இடமாவும் இயங்கும் 
இறைவனை உணர்த்தும் தொடர்மொழி. 

💧

God is knowledge of time and moving spacious article.

 


No comments:

Post a Comment