Pages

Thursday, 19 March 2026

பிற்கால அகத்தியர்

பிற்கால அகத்தியர் பெயரில் காணப்படும் நூலின் இருக்கும் பாடல்கள் எப்படி இருக்கின்றன என்பதை இங்குப் பார்க்கலாம்.  

0

சித்தர் கோவை


சித்தர் கோவையில் அகத்தியர் பாடல்கள் 
சில எடுத்துக்காட்டு

பூரணி மாமலை மகள் அருள் புதல்வன் 
காரண மா மத களிறு அடி பணிவாம் 

  • மலைமகள் மகன் ஆனைமுகன்

அமுத மதி அணி சடையினர் விடையவர் 
எமது மழ களிறு இணயடி பணிவாம் 

  • சிவன் மகன் ஆனைமுகன்

சூரன் குலம் அற வேலால் தடி மயில் 
வீரன் அறுமுகன் இணையடி பணிவாம். 

  • சூரன் குலத்தை அறுத்த ஆறுமுகன்  

அகத்தியர் பட்சணி


அகத்ததியர் பட்சணி (132) - பாடல்களில் காணப்படும் சொற்செட்டு நயம் 

கல்லுருகும் செம்பு
வல்லிருளில் நம்பு 
புல்லறுகு தும்பு
சொல்லுவது வம்பு

பீக்கிலாட்டைக் கண்டு
தாய்க்குளாட்டை உண்டு 
பேய்க்குள் ஆட்டைத் தின்று 
கூக்கல் ஆட்டைப் பாரே 

மங்கை முது கண்ணில் 
தங்கை கொடு மிசையத்
திங்கள் கதிர் சேரும் 
எங்கள் குலம் ஆமே 

கஞ்ச மலர்   தனையே 
மஞ்சமது நினையே 
செஞ்சொல் விழியவள் மேல் 
நெஞ்சில் இது குறியே 

அகத்தியர் ஞானம்


அகத்தியர் ஞானம் என்னும் நூலில் உள்ள படல்கள்.

இப்பெயரில் பதினெண் சித்தர் ஞானக்கோவையில் 
ஞானம் ஒன்று என்று 2 தனிப்பாடல்களும், 
ஞானம் 2 என்னும் பகுதியில் 2, 6, 9, 13, 16 எண்ணிட்ட 5 பாடல்களும் உள்ளன. 

இவை யோக ஞானம் பற்றியவை. 
பாடல்கள் இந்த நூற்றாண்டுப் புலவர் ஒருவரால் செய்யப்பட்டவை. எடுத்துக்காட்டுப் பாடல்கள்

பூரணமே தெய்வம் என்று உரைத்தார் ஐயா  
பூரணத்தை இன்னது என்று புகல வேண்டும் 
காரணத்தைச் சொல்லுகிறேன் நினைவாய்க் கேளு 
கலையான பதினாறும் பூரணமே ஆகும் 
மாரணமாம் உலகத்தில் மதி மயங்கி 
மதி கெட்டும்  பூரணத்தை இகழ்ந்தார் ஐயா
வாரணத்தை மனம் வைத்து பூரணத்தைக் காத்தால் 
வாசி என்றே சிவ யோக வாழ்க்கை  ஆக்கே.     (9)

  • பூரணம் என்னும் தெய்வம் குறைவு இல்லாத முழுப்பொருள். 
  • குறைந்த கலைகள் வளர்ந்திருக்கும் முழு நிலா போன்றது

சத்தியமே வேணுமடா மனித ரானால் 
சண்டாளம் செய்யாதே தவறிடாதே
நித்திய கர்மம் விடாதே  நேமம் விட்டு 
நிட்டையுடன் சமாதி விட்டு நிலை போகாதே 
புத்தி கெட்டுத் திரியாதே பொய் சொல்லாதே 
புண்ணியத்தை மறவாதே பூசல் கொண்டு 
கத்தியதோர் சள் இட்டுத் தர்க்கியாதே 
காமி என்று நடவாதே கதிரொளிதான் முற்றே. (16)

  • நடந்துகொள்ள வேண்டிய முறைமை பற்றி இந்தப் பாடல் கூறுகிறது

ஏகம் எனும் ஓரெழுத்தின் பயனைப் பார்த்து 
எடுத்துரைக்கும் இவ்வுலகில் எவரும் இல்லை 
ஆகமங்கள் நூல்கள் பல கற்றுக்கொண்டு 
அறிந்தம் என்பார் மவுனத்தை அவனை நீயும் 
வேகாத்தலை சாகாக்கால் விரைந்து கேளு
அதை எடுத்து உரைப்பவனே ஆசான் ஆகும் 
தேகமதில் ஓரெழுத்தைக் காண்போன் ஞானி 
திரு நடனம் காண முத்தி முத்தியாமே     (13)

  • ஓம் - என்பது ஓர் எழுத்து. 
  • உலகம் எல்லாம் இதில் அடங்கும் 
  • உடலில் இதனைக் காண வேண்டும்
  • மவுனமாகக் காணவேண்டும். 
  • வேகாத்தலை
  • சாகாக்கால்
  • இவற்றை எடுத்துரைப்பவனே ஞானி.
  • ஆகமங்களைக் கற்றவன் அல்ல. 
  • தேகத்தில் நடனம் நடக்கிறது. 
  • அது சிவன் நடனம்
  • சீவன் நடனம்
  • இதனைக் காண்பவனே ஞானி

பிழைப்பதற்கு நூல் பலவும் சொல்லாவிட்டால் 
பூரணத்தை அறியாமல் இறப்பார் என்றும் 
உடுப்பதற்கு நூல் கட்டிப் போடாவிட்டால் 
உலகத்தில் புத்தி கெட்டு அலைவார் என்றும் 
தலைப்பதற்குச் சாதி என்றும் விந்து என்றும் 
தந்தை தாய் பிள்ளை என்றும் பாரி என்றும் 
உழைப்பதற்குச் சொன்னது அல்லால் கெதி வேறு இல்லை
உத்தமனே அறிந்தோர்கள் பாடினாரே.     (4)

  • துணி கட்டாதவனைப் புத்தி கெட்டவன் என்பர்.அதனால் துணி கட்டுகிறோம்.
  • ஏதோ பிழைப்புக்காகப் பல நூல்களைக் கற்றுச் சொல்லிக்கொண்டு திரிகின்றனர். இவர்கள் பூரணத்தை (முழுமுதலை) உணர்வதில்லை.
  • தந்தை, தாய், பிள்ளை, மனைவி என்றெல்லாம் சொல்வது உழைத்துப் பிழைப்பு நடத்துவதற்காகவே. 

மு அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, \16 ஆம் நூற்றாண்டு, பாகம் 3, பக்கம் 194

No comments:

Post a Comment