Pages

Thursday, 29 January 2026

மூவர் பாடிய 5 புராணங்கள்

வரகுணராமன், வரதுங்கராமன், அதிவீரராமன் ஆகிய மூவரும் இலிங்க புராணம், வாயு சங்கிதை, பிரமோத்திர காண்டம், கூர்ம புராணம், காசி காண்டம் என்னும் 5 புராண நூல்களைப் பாடினர். 

இவற்றில் கூறப்பட்டவை தலபுராணச் செய்துகள் அல்ல. 
சிவ பராக்கிரம கதைகளும், பக்தர் பெருமையும் ஆகும். 

சைவ சாத்திரப் பொருள், சரியை கிரியைப் பொருள் ஆகியனவும் இவற்றில் சொல்லப்படுகின்றன. 

சிவ சின்னங்களான திருநீறு, உருத்திராக்கம், திருவைந்தெழுத்து ஆகியவற்றின் பெருமைகள், தீக்கைகள் சிவலிங்க அமைப்பு, சிவபூசை, தான விசேடங்கள், பிரதிட்டை, விரதங்கள், பிரணவம், நித்திய விதிகள் முதலானவை இவற்றில் சொல்லப்பட்டுள்ளளன. 

அகோர சிவம் போன்ற இவரது குருமார்கள் வடமொழிப் புராணங்களை இவர்களுக்கு வடமொழியில் கற்பித்தனர்.தமிழில் பாடும்படித் தூண்டினர். மூவரும் பாடினர். 

இவற்றில் மிரமோத்திர காண்டம் தவிர, ஏனைய 4 புராணங்களும் பூர்வ காண்டம், உத்தர காண்டம் என்று இரு பிரிவுகளாக உள்ளன. 

5 புராணங்களிலும் சைவ சமய ஒழுக்க நெறி விரிவாப் பேசப்படுகிறது. 

இவர்கள் காலத்தில் வாழ்ந்த எல்லப்ப நாவலர், புராணத் திருமலைநாதர் ஆகிய இருவரும் தலபுராணம் பாடினர். 

சதகம்


தொண்டை மண்டல சதகம் (17 ஆம் நூற்றாண்டு) 
கொங்கு மண்டல சதகம் (18 ஆம் நூற்றாண்டு)
சோழ மண்டல சதகம் (18 ஆம் நூற்றாண்டு)
பாண்டி மண்டல சதகம்

ஆகியவற்றில் கூறப்படும் செய்திகள் வரலாற்று உணர்வு இல்லாதவை. கதைகள். புனைந்துரைகள். 

பெயர் - பொருள்


புராணம் - பழங்கதை
சங்கிதை - பொருள் தொகுதி
கண்டம் - துண்டு
காண்டம் - நூலின் பெரும்பகுதி

மு அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, 
16 ஆம் நூற்றாண்டு, முதல் பாகம், பக்கம் 7

No comments:

Post a Comment