Pages

Monday, 6 October 2025

அறிவை ஆளவேண்டும்

அறிவை ஆளவேண்டும்
Knowledge should be ruled.


அறிவை அதன் விருப்பம் போல் செல்ல விடக்கூடாது. தீய செயல் செய்ய அறிவை விடக்கூடாது. நல்ல செயல்களைச் செய்யும்படி அறிவை வழிநடத்த வேண்டும்.  

Knowledge should not be allowed to go as it pleases. Knowledge should not be allowed to do evil deeds. Knowledge should be directed to do good deeds. 

சென்ற இடத்தால் செலவிடா தீது ஒரீஇ நன்றின்-பால் உய்ப்பது அறிவு - குறள் 43

ஒருவர் தன் மனத்தில் பட்டதை பிறர் எளிமையாகப் புரிந்துகொள்ளும்படும்படி எடுத்துரைக்க வேண்டும். பிறர் சொல்லும் சொற்களின் நுட்பத்தைப் புரிந்துக்கொள்ள வேண்டும். 

One should express what is on one's mind in a way that others can easily understand. One should understand the subtleties of the words that others use. 

எண் பொருள ஆக செல சொல்லி தான் பிறர்-வாய் நுண் பொருள் காண்பது அறிவு - குறள் 43

ஒருவர் மற்றொருவர்மீது தான் கொண்டுள்ள அன்பின் காரணமாக அறிவில் தெளிவு இல்லாத அவர் கூறும் கருத்துகளை ஏற்றுக்கொண்டால் அறியாமைதான் வந்து சேரும். 

If one accepts the opinions of someone who is not clear in knowledge due to the love they have for another, only ignorance will result. 

காதன்மை கந்தா அறிவு அறியார் தேறுதல் பேதைமை எல்லாம் தரும் - குறள் 51

அறிவானது சுருங்கும். விரியும். தான் ஆசைப்படுவதை நிறைவேற்றிக்கொள்ளத் துடிக்கும். பிறர் தன்னை வெறுப்பதைப் பற்றிக் கவலைப்படாது. இது ஒரு அறிவா? இதனால் யாருக்கு என்ன பயன்? 

Knowledge shrinks. It expands. It strives to fulfill what it desires. It does not care if others hate it. Is this knowledge? Who benefits from this? 

அஃகி அகன்ற அறிவு என் ஆம் யார்-மாட்டும் வெஃகி வெறிய செயின் - குறள் 18

நல்லூழ் இல்லாமை ஒருவனுக்குப் பழி அன்று. இதனை அறிந்துகொண்டு, விதியை வெல்ல முயல வேண்டும்.  இல்லையேல் பழிதான் மிஞ்சும். 

Lack of good intentions is not a fault for a person. One should understand this and try to overcome fate. Otherwise, only fault will remain. 

பொறி இன்மை யார்க்கும் பழி அன்று அறிவு அறிந்து ஆள்வினை இன்மை பழி - குறள் 62

No comments:

Post a Comment