Pages

Sunday, 5 October 2025

அறிவு இருக்குமிடம்

அறிவு வளரும்

  • கடலோர மணல்கேணி தோண்டத் தோண்ட அதிகமாக நீர் ஊறும். அதுபோலக் கற்கக் கற்க அறிவு வளரும்.
  • As you dig a sand pit on the beach, more water will seep in. Similarly, knowledge grows as you learn.
  • தொட்டனைத்து ஊறும் மணல் கேணி மாந்தர்க்கு கற்றனைத்து ஊறும் அறிவு - குறள் 40

அறிவு இருக்குமிடம்

  • அறிவு மனத்தில் உள்ளது போலத் தோன்றும். உண்மையில் அந்த அறிவானது அவனைச் சூழ்ந்திருக்கும் இனம் என்ன செய்கிறதோ அதைத்தான் நினைத்துக்கொண்டிருக்கும். 
  • Knowledge seems to be in the mind. In reality, that knowledge is just thinking about what the people around him are doing. 
  • மனத்து உளது போல காட்டி ஒருவற்கு இனத்து உளது ஆகும் அறிவு - குறள் 46:4

மற்றவர்களை

  • உப்பு மண்ணில் ஊறும் நீர் உப்புச் சுவை கொண்டிருக்கும். செம்மண்ணை அடித்துக்கொண்டு வரும் நீர் சிவப்பு நிறம் கொண்டிருக்கும். அதுபோல அறிவானது சூழ்ந்திருக்கும் மக்களை நினைத்துக்கொண்டிருக்கும். 
  • Water that soaks into salty soil tastes salty. Water that soaks into red soil tastes red. Similarly, knowledge thinks of the people around it. 
  • நிலத்து இயல்பான் நீர் திரிந்து அற்று ஆகும் மாந்தர்க்கு இனத்து இயல்பது ஆகும் அறிவு - குறள் 46:2

No comments:

Post a Comment