Pages

Monday, 22 September 2025

திருக்ககுறள் Tirukkuṟaḷ 0001

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன்  முற்றே உலகு. 

எழுத்துகளுக்கு முதல் [அ].
ஆதிபகவு உலகுக்கு முதல்.

ஆதி என்பது நம் நினைவுக்கு எட்டாத காலம்
அந்தம் என்பதும் நம் நினைவுக்கு எட்டாத காலம்

"ஆதியும் அந்தமும் இல்லா அருள் பெரும் சோதி" சிவன். 

ஆதி, அந்தம் என்னும் சொற்கள் வடமொழியில் உள்ளன. 
தமிழிலும் உள்ளன. 
தமிழில் இவற்றிற்கு வேர்கள் உள்ளன. 

அது என்பது ஒரு சுட்டுப்பெயர். 

"ஆதும் என்னுமவர்"  என்னும்போது ஆதும் என்பது வினைமுற்று.
ஆனேன், ஆகிறேன், ஆவேன் - வினைமுற்றுகள்.
ஆவேன் - தன்மை ஒருமை
ஆவாய் - முன்னிலை ஒருமை
ஆதும் - தன்மை, முன்னிலை, படர்க்கை என்னும் மூவிடப் படர்க்கை. 

என்னும் வழக்கை எண்ணுவோம் 

ஆதல் என்னும் சொல் ஆதி ஆயிற்று. 

அந்தம் [அம் தம்] இடைச்சொற்க்கள். 

வினைச்சொல்லாகவும், இடைச்சொல்லாகவும் வழங்கும் தமிழ்ச்சொல்லை அயன்மொழிச்சொல் எனக் காண்பது அறியாமை. 

மொழியறிவு முடம். 

ஆதி - ஆதியில் - ஆதி காலம்
பகவு - பங்கு போட்டுக்கொள்ளும் இடம்
ஆதிபகவு - காலமும் இடமும்

அவன் என்று நாம் குறிப்பிடும் இறைவன் காலமாகவும் இடமாகவும் இருப்பவன். 

The God we refer to as He is one who exists in time and space.

ஆதி நம் அறிவுக்குத் தெரியாதது.
பகவு நமக்குத் தெரிந்தவை.

[a] is the source for all letters.
God-spreading is the source for the world.

Adi is unknown to our knowledge.
Bhagavan is all we know.

No comments:

Post a Comment