பெயர்
ஒட்டக்கூத்தரின் இயற்பெயர் கூத்தர்
இது கூத்தாடும் நடராசன் பெயர்.
ஆதியில் இவர் பெயர் அம்பலக் கூத்தர் என வழங்கிவந்தது.
பின்னர் கூத்தர் என்னும் பெருவழக்கில் நிலவிற்று.
துணி நெய்யும்போது கால்மாறி மிதிப்பது கூத்து போல் இருப்பதால் இவர் நெசவாளி என்று ஒருவர் எழுதியிருக்கிறார்.
மலரி
இவர் ஊர் மலரி.
"மலரிவரு கூத்தன் தன் வாக்கு" (தண்டியலங்காரம் - மேற்கோள் பாடல் அடி)
திருவெறும்பூரை மலரி என்று கல்வெட்டு ஒன்று கூறுகிறது.
காழி என்னும் சீகாழி / சீர்காழி
‘சுந்தர பாண்டியம்’ என்னும் நூலைப் பாடியவர் அனதாரியப்பன்.
அவனைப் புகழும் பாடல் ஒன்று இவ்வாறு உள்ளது.
கம்பன் என்றும் கும்பன் என்றும் காழி ஒட்டக்கூத்தன் என்றும்
கும்பமுனி என்றும் பேர் கொள்வரோ - அம்புவியில்
மன் நாவலர் புகழும் வாயல் அனதாரியப்பன்
அந்நாளிலே இருந்தக்கால்.
இதில் ஒட்டக்கூத்தன் ‘காழி ஒட்டக்கூத்தன்’ எனக் குறிப்பிடப்படுகிறான்.
இதுகொண்டு இவர் ஊர் சீகாழி என்கின்றனர்.
சம்பந்தர் காழியில் பிறந்தவர்.
ஒட்டக்கூத்தர் தாம் பாடிய தக்கயாகப் பரணி என்னும் நூலில் எந்தத் தொடர்பும் இல்லாமல் சம்பந்தரைப் புகுத்தியிருக்கிறார்.
இது இவர் ஊர் காழி எனபதை உறுதிப்படுத்துவதாக உள்ளது.
மேலும்
சீர்காழியில் சட்டைநாதர் என்ற வைரவமூர்த்திக்கு (வீரபத்திரருக்கு)த் தனிச் சிறப்பு உண்டு.
தக்கயாகப் பரணி நூலில் இவரது காப்புப்பாடல் உள்ளது.
இதுவும் இவர் ஊர் காழி என்பதை உறுதி செய்கிறது.
அன்றியும்
கூத்தர் காழி கவுணியர் கோன் பத்தியுடனே தக்கன் மகப் பரணி பாடினான் - என்று சோழமண்டல சதகம் பாடல் (64) குறிப்பிடுகிறது.
திருமணவூர்
இது சோழநாட்டுத் திருவாய்மூர் அருகில் உள்ளது.
கூத்தர் சரிதம் எழுதிய நாராயணசாமி முதலியார் குறிப்பு ஒன்றை விரித்து எழுதும் செங்குந்தர் பிரபந்தத் திரட்டு நூலின் பதிப்பு கூத்தர் இந்த மணக்குடியினர் எனக் குறிப்பிடுகிறது.
இதில்
கூத்தரின் தந்தை பெயர் சிவசங்கர பூபதி
தாயார் பெயர் வண்டமர் பூங்குழலி
என உள்ளது.
"மணவை வரும் கூத்தன் தன் வாக்கு" - என்னும் அடி சில கையேடுகளில் காணப்படுகிறது.
மணவை = மணவூர்
மு அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு,
12 ஆம் நூற்றாண்டு, முதல் பாகம், பக்கம் 256
No comments:
Post a Comment