Pages

Saturday, 27 April 2019

குறுந்தொகை 288 Kurunthogai 288

அவன் பெருங்கல் நாடன்
அந்த நாடு மிளகுக் கொடி படரும் மலையடுக்கம்
மிளகுக் கொடியின் கொழுந்துகளைக் குரங்குகள் அருந்தும்

நாடன் இனியவன்
அவனோடு எனக்கு உள்ள உறவைச் சொல்லி என் உறவுக்காரர்கள் என்னைக் கொடுமைப்படுத்துகின்றனர்

இந்த இனிய கொடுமையை விட
இனிது என்று சொல்லப்படும் தேவர் உலகம் எனக்கு இனிது ஆகுமா
ஆகாது

தலைவி தோழியிடம் கூறுகிறாள் 

ஒப்புநோக்குக 

புலத்தலின் புத்தேள் நாடு உண்டோ நிலத்தொடு 
நீரியைந்து அன்னார் அகத்து - திருக்குறள் 1323



No comments:

Post a Comment