Pages

Friday, 26 April 2019

குறுந்தொகை 282 Kurunthogai 282

பொருளீட்டச் சென்ற அவர்
கார் காலத்தில்
வரகு முளைக்கும் இலைகளை
அன்று பிறந்த நவ்வி மான் கவ்வி விளையாடுவதைப் பார்ப்பார் 

நீரோட்டம் உள்ள நிலத்தில்
உள்ளே துளை உள்ள கூதாளம் பூ
கழன்று விழுவது போல
என் கையிலுள்ள வளையல்கள் கழன்று விழுகின்றன

என் வளையல் கழன்று விழாது என்று அவர் எண்ணுவாரோ

தலைவி தன் தோழியிடம் இவ்வாறு சொல்லிக் கலங்குகிறாள் 



No comments:

Post a Comment