Pages

▼

Tuesday, 27 December 2016

நற்றிணை 318 Natrinai 318

பண்டு நிகழ்ந்ததை நினைத்து 
இன்று காட்டு வழியில் 
பொருளீட்டச் செல்லவிருப்பதை எண்ணிப்பார்தீரா, 
ஐய, 
என்று தலைவி 
தலைவனை வினவுகிறாள்.


அன்று நான் 
என் தாய்தந்தையரைப் பிரிந்து உன்னுடன் வந்தேன். 
இருவரும் 
பருத்த அடிமரம் கொண்ட ஓமை மரத்துக் கிளைகள் 
தரும் 
பொருத்தமில்லாமல் புள்ளிபட்டுக் கிடக்கும் 
அருநிழலில் தங்கியிருந்தோம். 

அப்போது உயர்ந்த தந்தங்களைக் கொண்ட ஆண்யானை ஒன்று 
அங்கு வந்தது. 
அது நம்மை அச்சுறுத்தவில்லை. 
வழக்கமாகச் செல்லும் அதன் வழியில் வந்தது. 
தழைகளை ஒடித்துத் தின்றது. 
வளையம் வளையமாகப் பொறிபட்டிருக்கும் 
தன் வலிமை மிக்க கையைச் சுருக்கிப் 
பிறிதொரு கிளைக்கு நீட்டியது. 

அதனை அதன் பொண்யானை 
தன் ஆணுக்கு ஏதோ நேர்ந்துவிட்டது 
என்று வேறாக உணர்ந்துகொண்டு பிளிறியது. 

அந்த ஒலியானது 
கோடைக்காலத்தில் காய்ந்துகிடந்த 
மலைப்பிளவெல்லாம் எதிரொலித்தது. 
இதனை எண்ணிப்பார்த்தாயா?

இத்தகைய கொடிய வழியில் 
தனியே பொருளீட்டுவதற்காக 
மீண்டும் செல்லலாமா, 

என்று தலைவி தலைவனை வினவுகிறாள்.
 
பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை பாலை

நினைத்தலும் நினைதிரோ ஐய! அன்று நாம்
பணைத் தாள் ஓமைப் படு சினை பயந்த
பொருந்தாப் புகர் நிழல் இருந்தனெம் ஆக,
நடுக்கம் செய்யாது, நண்ணுவழித் தோன்றி,
ஒடித்து மிசைக் கொண்ட ஓங்கு மருப்பு யானை  5
பொறி படு தடக்கை சுருக்கி, பிறிது ஓர்
ஆறு இடையிட்ட அளவைக்கு, வேறு உணர்ந்து,
என்றூழ் விடர் அகம் சிலம்ப,
புன் தலை மடப் பிடி புலம்பிய குரலே?

பிரிவு உணர்த்தப்பட்ட தலைமகனைத் தோழி சொல்லியது.
பாலை பாடிய பெருங் கடுங்கோ பாடல்

இது கி.மு. காலத்துப் பாடல்.


யானை தழை உண்ணல் 

No comments:

Post a Comment