Pages

Monday 26 December 2016

நற்றிணை 316 Natrinai 316

இந்தக் கருநிற மழைமேகம் 
மௌவல் மலரைப் பூக்கச்செய்து 
தன் அழகை வரவழைத்துக்கொண்டு 
தன் அறியாமையை வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறது.

கயல்மீன் போன்ற கண்ணும், 
கனத்த காதுக்குழையும் 
கொண்டவளே!

இந்தப் பூக்கள் 
உன் பற்கள் விரிவது போல் 
காணப்படுகின்றன என்று 
உன் நெற்றியை நீவிக்கொண்டு சொன்னவர் 
சென்றுவிட்டார். 

அவர் உன்னை நயந்து திரும்பி வருவதற்கு முன்பாகவே 
மலையடுக்கம் புதையும்படி 
மழைக்கால் இறக்கி, 
மழை பொழிந்துகொண்டு 
பரந்த வெளியில் 
இடி முழங்குகிறது.

இது 
உண்மையான மழைக்காலம் அன்று, 
இதனை நம்ப வேண்டாம், 
என்று தோழி 
தலைவிக்கு ஆறுதல் கூறுகிறாள்.
 
பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை முல்லை

மடவது அம்ம, மணி நிற எழிலி
''மலரின் மௌவல் நலம் வரக் காட்டி,
கயல் ஏர் உண்கண் கனங்குழை! இவை நின்
எயிறு ஏர் பொழுதின் ஏய்தருவேம்'' என,
கண் அகன் விசும்பின் மதி என உணர்ந்த நின்    5
நல் நுதல் நீவிச் சென்றோர், தம் நசை
வாய்த்து வரல் வாரா அளவை, அத்தக்
கல் மிசை அடுக்கம் புதையக் கால் வீழ்த்து,
தளி தரு தண் கார் தலைஇ,
விளி இசைத்தன்றால், வியல் இடத்தானே.                                10

பிரிவிடை மெலிந்த தலைமகளைத் தோழி வற்புறுத்தது.
இடைக்காடனார் பாடல்

இது கி.மு. காலத்துப் பாடல்.


மௌவல் 

No comments:

Post a Comment