Pages

Sunday, 25 December 2016

நற்றிணை 312 Natrinai 312

நெஞ்சே! 
நானோ நொந்துகிடக்கிறேன். 

நீயோ 
பொருளீட்ட உன்னோடு வரவில்லை என்று நொந்துகொள்கிறாய். 

பார்வை வேட்டுவன் 
பழக்கி வைத்திருக்கும் தன் குருகின் 
கால்கட்டை அவிழ்த்துவிட்டதும் 
அது பறந்து சென்று 
பனி பொழியும் காலை வேளையில் 
முள் இருக்கும் இண்டம்புதரில் 
அதன் அழகிய இலைகள் 
தன் சிறகுகளை வருடிக்கொடுக்க 
அமர்ந்திருக்கும் காலைநேரம் இது.

என் காதலியோ, 
கோடைக்காலத்தில் 
நான் அவளது அருகில் இருக்கும்போதே 
தித்தி (aoerla) முலையுடன் நடுங்குவாள்.

மழை பொழிந்து நின்ற பின்னர், 
தோன்றும் பனிக்காலத்தில், 
வாடைக் காற்று வீசும்போது 
அவள் என்ன ஆவாளோ 
என்று நான் வருந்திக்கொண்டிருக்கிறேன். 

நீயோ 
பொருளீட்ட உன்னோடு வரவில்லை என்று 
நொந்துகொள்கிறாய்.
 
ஈங்கை – இண்டம் புதர்
தித்தி – முலை முகட்டில் இருக்கும் கருமை
பனித்தல் – நடுங்குதல்
பார்வை வேட்டுவன் – கொக்கைப் பிடிக்கும் வேடன் பெண்கொக்கைப் பழக்கிக் காலில் கட்டி வைத்திருப்பான். வேடன் கால்கட்டை அவிழ்த்து விட்டதும் அது பறந்து சென்று ஆண்கொக்கை மயக்கி அழைத்து வந்து வேட்டுவனின் வலையில் விழச் செய்யும்.
மை அல் அற்சிரம் – மேகம் அல்லாத மேகமாகிய பனிமூட்டம் தோன்றியிருக்கும் பனிக்காலம்

பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை பாலை

நோகோ யானே, நோம் என் நெஞ்சே
''பனிப் புதல் ஈங்கை அம் குழை வருட,
சிறை குவிந்திருந்த பைதல் வெண் குருகு,
பார்வை வேட்டுவன், காழ் களைந்தருள,
மாரி நின்ற, மையல் அற்சிரம்   5
யாம் தன் உழையம் ஆகவும், தானே,
எதிர்த்த தித்தி முற்றா முலையள்,
கோடைத் திங்களும் பனிப்போள்
வாடைப் பெரும் பனிக்கு என்னள்கொல்?'' எனவே.

பொருள் வலித்த தலைமகன் நெஞ்சினை நெருங்கிச் சொல்லியது.
கழார்க் கீரன் எயிற்றியார் பாடல்

இது கி.மு. காலத்துப் பாடல்.

தித்தி
எதிர்ந்த தித்தி முற்றா முலையள்

ஈங்கை \ இண்டு 

No comments:

Post a Comment