Pages

Thursday, 22 December 2016

நற்றிணை 301 Natrinai 301

நீண்ட மலையில் 
பருத்த கோலில் 
அன்று பூத்த குறிஞ்சிமலர் போன்ற மேனி.

அகன்ற சுனையில் 
பூத்திருக்கும் நெய்தல் மலரின் 
இரண்டு பெரிய ஈரமான இதழ்கள் 
இணைந்ததிருப்பது போன்ற கண்கள்.

மயில் தோகை போன்ற தோற்றம்.
கழுத்தில் சிவப்பு-மாலை அணிந்திருப்பது போன்ற 
தோற்றம் கொண்ட கிளி பேசுவது போன்ற 
வாய்ச்சொற்கள்.

மூங்கில் போன்ற தோள்.

ஓவியப் பாவை போன்ற அழகு.

இவளது தாயே மறக்கமுடியாத 
மணம் கமழும் கூந்தல்.

இவற்றைக் கொண்டவள் இவள்.

என்றெல்லாம் 
இவன் உன்னைப் பாராட்டுகிறான், 
என்று தோழி 
தலைவியிடம் சொல்கிறாள்.
 
பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை குறிஞ்சி

''நீள் மலைக் கலித்த பெருங் கோற் குறிஞ்சி
நாள்மலர் புரையும் மேனி, பெருஞ் சுனை
மலர் பிணைத்தன்ன மா இதழ் மழைக் கண்,
மயில் ஓரன்ன சாயல், செந் தார்க்
கிளி ஓரன்ன கிளவி, பணைத் தோள், 5
பாவை அன்ன வனப்பினள் இவள்'' என,
காமர் நெஞ்சமொடு பல பாராட்டி,
யாய் மறப்பு அறியா மடந்தை
தேம் மறப்பு அறியாக் கமழ் கூந்தலளே.

சேட்படுத்து, ''பிரிவின்கண் அன்பின் இயற்கையில் தகுவகையதோர் ஆற்றாமையினான்'' என்று, தோழி தன்னுள்ளே சொல்லியது.
பாண்டியன் மாறன் வழுதி பாடல்

இது கி.மு. காலத்துப் பாடல்.

குறிஞ்சி மலர்
அவள் குறிஞ்சி மலர் போன்ற மேனி கொண்டவள்

No comments:

Post a Comment