Pages

Friday 2 December 2016

நற்றிணை Natrinai 253

என் தலைவியின் தலைவனே! 

மாலையில் பறவைகள் இருப்பிடம் செல்வதைப் பார்த்தாலும், 
ஆணும் பெண்ணுமாகச் சேர்ந்து வாழ்வோரைப் பார்த்தாலும், 
நீ பெருந்துன்பத்துடன் வருந்தி, 
பள்ளி கொள்ளும் யானை போலப் பெருமூச்சு விடுகிறாய். 

என் தலைவியையே நீ பெரிதும் நினைத்துக்கொண்டிருக்கிறாய். 
நான் கூறும் சொற்களைக் (எனவ) கேட்பாயாக. 

அழகு ததும்பும் உருவத்தோடு 
ஒளிரும் அணிகலன்களை அணிந்துகொண்டு 
நினைத்தாலும் நடுங்கும் அரிய கட்டுக்காவலில் 
என் தலைவி இருக்கிறாள். 

பனங்குடை பலவற்றில் கள்ளை வழங்கி 
உண்டு மகிழும் வள்ளல் பாரி. 

அவன் குன்றம் இடி முழங்கும் மழைமேகம் முற்றி, 
பலாப் பழங்கள் மிக்கது. 

இந்தப் பாரியின் குன்றம் போல் 
யாரும் அணுக முடியாத பாதுகாப்பில் அவள் இருக்கிறாள்.

நீ அவளைப் பெற முடியாது. 
திருமணம் செய்துகொண்டால் பெறலாம், 
என்று தோழி தலைவனுக்கு உணர்த்துகிறாள்.
 
பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை குறிஞ்சி

புள்ளுப் பதி சேரினும், புணர்ந்தோர்க் காணினும்,
பள்ளி யானையின் வெய்ய உயிரினை,
கழிபட வருந்திய எவ்வமொடு பெரிது அழிந்து
எனவ கேளாய், நினையினை, நீ நனி:
உள்ளினும் பனிக்கும் ஒள் இழைக் குறுமகள்,         5
பேர் இசை உருமொடு மாரி முற்றிய,
பல் குடைக் கள்ளின் வண் மகிழ்ப் பாரி,
பலவு உறு குன்றம் போல,
பெருங் கவின் எய்திய அருங் காப்பினளே.

செறிப்பு அறிவிறீஇ வரைவு கடாயது.
கபிலர் பாடல்

இது கி.மு. காலத்துப் பாடல்.


பள்ளி யானை \ படுத்துறங்கும் யானை

No comments:

Post a Comment