Pages

Thursday, 24 November 2016

நற்றிணை Natrinai 232

சிறிய கண்ணும் பெரிய கையும் கொண்ட 
யானை இனத்தின் ஆணும் பெண்ணுமாகிய இரண்டு 
குளவி மலர் பூத்துள்ள குளத்தில் 
ஒன்றை ஒன்று தொட்டுக்கொண்டு சேர்ந்திருந்த பின்னர், 

அங்குச் சோலையில் இருந்த 
வாழையைத் தின்பதில் வெறுப்பு கண்டு, 
அதனை அடுத்து மூங்கிலில் வேலி போடப்பட்டிருந்த 
பலாம்மழத்தைத் தோண்டித் தின்னும் பெருமலை நாடனே! 

கேள். 

கல்லுப் பாறைகளும் மூங்கிலும் சிறைந்த எங்கள் ஊர் பாக்கத்தில்,
வேங்கை மலர் கொட்டிக்கிடக்கும் முற்றத்தைக் கொண்ட 
எம் தந்தையின் இல்லத்தில் தங்கிச் செல்ல விரும்பினால், 
இவளை மணந்துகொண்டு காம இன்பம் தருமாறு வேண்டுகிறேன். 

இவ்வாறு தோழி தலைவனிடம் கூறுகிறாள்.
  • முணைஇ = வெறுத்து
  • வேரல் = பெருமூங்கில்
  • வீ = உதிரும் பூ
  • அல்கல் = தங்கல்
  • ஈர் யானை - யானை என்ற சொல்லின் முதல் எழுத்து யா. இது அரை-உயிர். இரண்டு என்னும் சொல் மெய்யெழுத்து வந்து புணர்ந்தால் இரு எனத் திரியும். உயிரெழுத்து வந்து புணர்ந்தால் ஈர் என நின்று புணரும். யா எழுத்து அரையுயிர் ஆகையால் ஈரியானை என புணர்ந்துள்ளது.

பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை குறிஞ்சி

சிறுகண் யானைப் பெருங்கை ஈரினம்     
குளவித் தண்கயங் குழையத் தீண்டிச்     
சோலை வாழை முணைஇ அயலது     
வேரல் வேலிச் சிறுகுடி அலறச்
செங்கால் பலவின் தீம்பழ மிசையும் 5 
மாமலை நாட தாமம் நல்கென     
வேண்டுதும் வாழிய எந்தை வேங்கை   
வீயுக விரிந்த முன்றில்     
கல்கெழு பாக்கத்து அல்கினை செலினே.

பகல் வருவானை இரவு வா எனத் தோழி சொல்லியது.
முதுவெங்கண்ணனார் பாடல்

இது கி.மு. காலத்துப் பாடல்.

கயத்தில் \ குளத்தில் ஈர் யானை \ இரண்டு யானை

No comments:

Post a Comment