Pages

Monday, 21 November 2016

நற்றிணை Natrinai 220

மடலேறும் தலைவன் கூறுகிறான். 


தலைவி வாழும் ஊரிலுள்ள சிறுவர்கள் தலைவிக்கு அயலவர் ஆகித் தன் பக்கம் சேர்ந்துகொண்டனராம்.

உண்ணாத மடல் குதிரையில் வருகிறேன். 
குதிரையில் மணி கட்டப்பட்டிருக்கிறது. 
குதிரையின் மேல் என்னைக் கச்சால் கட்டி நிறுத்தியுள்ளனர். 
எருக்கம்பூ மாலையை அணிந்திருக்கிறேன். 
இந்த ஊர்ச் சிறுவர்கள் பெரிதும் சால்பு உள்ளவர்கள். 
விடியற்கால முழவு ஓசை கேட்பதற்கு முன்பதாகவே என்னிடம் வந்துவிட்டனர். 
“நாங்கள் இந்த ஊர்க்காரர்கள்” என்று கூறுகின்றனர். 
இவர்கள் ஒப்புரவு அறிந்தவர்களாக எனக்குப் பாதுகாப்புத் தருகின்றனர். 

கயல் மீனைப் போன்ற கண்ணை உடைய சிறுமி என் தேமொழி. 

அவளுக்கு அயலவராக, உனக்குக் கூட்டாளியாக ஆகிவிட்டோம் என்று சொல்லிக்கொண்டு என்னுடன் சேர்ந்து வருகின்றனர்.
  • சான்றோர் = நன்னடத்தை உள்ளவர்
  • ஒப்புரவு = உலகியலோடு ஒத்து நடத்தல்

பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை குறிஞ்சி

சிறு மணி தொடர்ந்து, பெருங் கச்சு நிறீஇ,
குறு முகிழ் எருக்கங் கண்ணி சூடி,
உண்ணா நல் மாப் பண்ணி, எம்முடன்
மறுகுடன் திரிதரும் சிறு குறுமாக்கள்,
பெரிதும் சான்றோர் மன்ற விசிபிணி     5
முழவுக் கண் புலரா விழவுடை ஆங்கண்,
''ஊரேம்'' என்னும் இப் பேர் ஏமுறுநர்
தாமே ஒப்புரவு அறியின், ''தேமொழிக்
கயல் ஏர் உண்கண் குறுமகட்கு
அயலோர் ஆகல்'' என்று எம்மொடு படலே!                 10

குறை நேர்ந்த தோழி தலைமகளை முகம் புக்கது.
பின்னின்ற தலைமகன் தோழி கேட்பத் தலைமகளை ஓம்படுத்ததூஉம் ஆம்.
தான் ஆற்றானாய்ச் சொல்லியதூஉம் ஆம்.
குண்டுகட்பாலியாதனார் பாடல்

இது கி.மு. காலத்துப் பாடல்.

No comments:

Post a Comment