மாதவி போல் வாழும் பரத்தை ஒருத்தி சொல்கிறாள்.
பிணக்கைத் தீர்த்து அவர் என்னை அணைக்கவில்லை
என்றாலும், அவர் என்னுடன் வாழ்கிறார் என்பதைக் காணவேண்டிய அவர் மனைவி தெரிந்துகொண்டால்
எனக்கு இன்பம்.
கண்ணில் தூசி விழுந்தால் கை உதவுவது போல
அவர் எனக்கு உதவவில்லை என்றாலும் அவர் இல்லாத ஊரில் வாழ்தல் எனக்கும் துன்பம்.
எரியும் தீயைப் போல் மலரும் வேங்கை மரத்
தெய்வம் முருகன் காப்பதும்,
மாதவிக் கொடி நிறைந்ததுமான மலைப் பகுதி வயலில்
தினைப்புனம்
காக்கும் பரண் பந்தல் மேல் ஏறி நின்றுகொண்டு,
எந்த வகையிலும் தனக்கு உறவினன் அல்லாத
பாண்டிய அரசன் தனக்கு இழைத்த கவலை கலக்க,
விருப்பமுடன் சேர்ந்து வாழ்பவரே இனியவர்.
அல்லாத
பிறர் எனக்கு இனியவர் ஆகாதவர்.
- துனி = பெரும் பிணக்கு, ஊடல்
- விழுமம் = துன்பம்
- வேங்கைக் கடவுள் = முருகன்
- ஒரு முலை அறுத்த திருமாவுண்ணி = சிலப்பதிகாரக் கண்ணகி \ திருமா = திருமகள் \ உண்ணி = உண்ணத் தக்கவள், நினைக்கத் தக்கவள் \ திருமகளால் நினைத்துப் பார்க்கத் தக்கவள்.
- வேட்டோர் = விரும்பி இணைந்து வாழ்பவர்
- குருகு = குருக்கத்தி கொடி, மாதவிக் கொடி
பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை மருதம்
துனி தீர் கூட்டமொடு
துன்னார் ஆயினும்,
இனிதே, காணுநர்க் காண்புழி
வாழ்தல்;
கண்ணுறு விழுமம் கை
போல் உதவி,
நம் உறு துயரம்
களையார் ஆயினும்,
இன்னாது அன்றே, அவர் இல் ஊரே; 5
எரி மருள் வேங்கைக்
கடவுள் காக்கும்
குருகு ஆர் கழனியின்
இதணத்து ஆங்கண்,
ஏதிலாளன் கவலை கவற்ற,
ஒரு முலை அறுத்த
திருமாவுண்ணிக்
கேட்டோர் அனையர் ஆயினும், 10
வேட்டோர் அல்லது, பிறர் இன்னாரே.
தலைமகட்குப் பாங்காயினார் கேட்பத் தலைமகன் தலைநின்று
ஒழுகப் படாநின்ற பரத்தை, பாணற்குஆயினும் விறலிக்குஆயினும்
சொல்லுவாளாய், நெருங்கிச் சொல்லியது.
மதுரை மருதன் இளநாகனார்
பாடல்
இது கி.மு. காலத்துப் பாடல்.

No comments:
Post a Comment