Pages

Tuesday, 15 November 2016

நற்றிணை Natrinai 202

காதலால் தன்னுடன் வரும் தலைவிக்குத் தலைவன் காட்டுவழியில் வேடிக்கை காட்டிக்கொண்டு செல்கிறான்.


ஆண்யானை புலியைக் குத்திச் சிவந்த கொம்பு-முத்தை ஆரவாரப்படுத்திக்கொண்டு செல்கையில் வலிமை மிக்க தன் பிடரியால் பருத்த அடிமரத்தை முருக்கித் தள்ளிக்கொண்டு, தன் கன்றையும் பெண்யானையையும் கையால் தழுவிக்கொண்டு, தன் மதநீரில் மொய்க்கும் ஈக்கள் ஓடும்படி, வேங்கை மரத் தழைகளைப் பறித்துத் தன் கன்றுக்கும் பெண்ணுக்கும் ஊட்டிக்கொண்டு, மலைப் பிளவுகளிலெல்லாம் திரிவதை, குறுமகளே! பார். 

நீ வாழ்க. உன் தந்தையின் காட்டில் கோங்கம் பூக்கள், 
ஆறு மீன்களுடன் தோன்றும் கார்த்திகை மாதத்தில் செல்லும் ஒளிமண்டலக் கொடி போலக் கோங்கம் பூத்துக் கிடக்கும் அழகைப் பார்.  
பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை பாலை

புலி பொரச் சிவந்த புலால் அம் செங் கோட்டு
ஒலி பல் முத்தம் ஆர்ப்ப, வலி சிறந்து,
வன் சுவல் பராரை முருக்கி, கன்றொடு
மடப் பிடி தழீஇய தடக் கை வேழம்,
தேன் செய் பெருங் கிளை இரிய, வேங்கைப்           5
பொன் புரை கவளம் புறந்தருபு ஊட்டும்
மா மலை விடரகம் கவைஇ, காண்வர,
கண்டிசின்-வாழியோ, குறுமகள்!-நுந்தை,
அறுமீன் பயந்த அறம் செய் திங்கள்
செல் சுடர் நெடுங் கொடி போல,               10
பல் பூங் கோங்கம் அணிந்த காடே.

உடன் போகாநின்ற தலைமகன் தலைமகட்குச் சொல்லியது.
பாலை பாடிய பெருங் கடுங்கோ பாடல்

இது கி.மு. காலத்துப் பாடல்.

கோங்கம் மலர் 

அறுமீன் \ கார்த்திகை மீன்
அறுமீன் ஒளி மண்டலம்
அறுமீன் ஒளி மண்டலம்
போலக்
கோங்கம் பூக்கள்
 பூத்துக் கிடக்கின்றனவாம் 

No comments:

Post a Comment