Pages

Sunday, 27 November 2016

நாலடியார் Naladiyar 8

“யாம் செல்வர்” என்று எண்ணிக்கொண்டு
இறந்த பின்னர்
தான் செல்லப்போகும் இடத்தை எண்ணாமல்
இருக்கும் அற்ப அறிவினை உடையவரது
பெருஞ்செல்வம்
பகலில் கருமேகம் வாயைத் திறந்த மின்னல் போல் தோன்றி
இருந்த இடம் தெரியாமல் கெட்டுப் போகும்.

பாடல்

'செல்வர் யாம்!' என்று தாம் செல்வுழி எண்ணாத
புல்லறிவாளர் பெருஞ் செல்வம், எல்லில்
கருங் கொண்மூ வாய் திறந்த மின்னுப்போல் தோன்றி
மருங்கு அறக் கெட்டுவிடும்.              

பத்து - செல்வம் நிலையாமை
சமண முனிவர்கள் பாடிய பாடல்களின் தொகுப்பு நாலடியார் என்னும் நூல்.
இதில் வெண்பா யாப்பில் அமைந்த நன்னெறிப் பாடல்கள் 400 உள்ளன.
காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டுக்கு முன்


மேகத்தில் தோன்றும் மின்னல் 

No comments:

Post a Comment