உனக்கு நான் தங்கை ஆவேன்
புலால் நாற்றத்துடன் பொய்கையில் வாழும் நீர்நாயின்
ஆண், வாளை மீனின் இரையை நாள்தோறும் தேடித் திரியும் ஊரின் தலைவன் நீ.
பெருமானே!
பாணன்
என்பவனும் ஆரியப் பொருநன் என்பவனும் மற்போரில் ஈடுபட்டனர்.
பாணனின் வலிமை மிக்க தோளில்
ஆரியப் பொருநன் தாக்கினான்.
தாக்கிய ஆரிய பொருநன் கை அவனது வலிமை மிக்க தோளிலிருந்து
முறிந்து கை வேறு தோள் வேறு என்று ஆகிவிட்டது.
இதனைப் பார்த்துக்கொண்டிருந்த கணையன்
நாணினான்.
பெருமானே!
உன் வைப்பாட்டி (மறையினள்)
மெல்ல வந்தாள்.
உன் மனைவியிடம் நயமாகப் பேசினாள்.
“மேகம் போன்று ஈரமான கூந்தலை உடையவளே!
நானும் உன் தெருவில் பக்கத்து வீட்டில்தான் வாழ்கிறேன்.
ஒரு வகையில் நான் உனக்குத்
தங்கை ஆவேன்” என்று கூறினாள்.
மோதிர விரல் கொண்ட தன் கையால் உன் மனைவியின் கூந்தலையும்,
நெற்றியையும் குளுமை கொள்ளும்படித் தடவிக்கொடுத்துக்கொண்டே கூறினாள்.
அவள் நேற்றுதான்
வந்துபோனாள்.
இந்த நிகழ்வைப் பார்த்ததும் எனக்கு வெட்கம் வந்துவிட்டது.
கணையன் நாணியது
போல வெட்கம் வந்துவிட்டது. –
பரத்தையிடமிருந்து
வந்த தலைவனிடம் தோழி இவ்வாறு கூறுகிறாள்.
பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை மருதம்
பொய்கை நீர்நாய்ப் புலவு
நாறு இரும் போத்து
வாளை நாள் இரை
தேரும் ஊர!
நாணினென், பெரும! யானே பாணன்
மல் அடு மார்பின்
வலி உற வருந்தி,
எதிர்தலைக் கொண்ட ஆரியப் பொருநன் 5
நிறைத் திரள் முழவுத்
தோள் கையகத்து ஒழிந்த
திறன் வேறு கிடக்கை
நோக்கி, நல் போர்க்
கணையன் நாணியாங்கு மறையினள்
மெல்ல வந்து, நல்ல
கூறி,
''மை ஈர் ஓதி
மடவோய்! யானும் நின் 10
சேரியேனே; அயல் இலாட்டியேன்;
நுங்கை ஆகுவென் நினக்கு''
என, தன் கைத்
தொடு மணி மெல்
விரல் தண்ணெனத் தைவர,
நுதலும் கூந்தலும் நீவி,
பகல் வந்து பெயர்ந்த
வாணுதற் கண்டே. 15
தோழி வாயில் மறுத்தது;
தலைமகள் தகுதி சொல்லியதூஉம் ஆம்.
பரணர் பாடல்
கி.மு.
காலத்துப் பாடல்
You are the Man of the land where beaver with flesh-smell tries to eat swordfish every day.
I am ashamed of your sexual behavior with a neighboring lady, the friend-maid of the lady, his wife says.
Once, a wrestling compact between two kings, Panan and Ariyap-Porunan, ends in pathetic result; the hands of the latter were broken into two pieces when attacking the chest of the former.
On seeing this event King Kanayan felt ashamed.
As he felt, I am feeling ashamed of an event happened on behavior.
Your sexual lady came here; applied her fingers with rings on the hair and forehead of your wife; says in her pleading voice “I am your sister, in a way in a contact relation”; and when I happened to hear words to your wife, I felt ashamed.
I do not like your behavior in this matter.

அருமையான விளக்கம்
ReplyDeleteஒருவகையில் (உன் கணவனுக்கு மனைவி என்ற வகையில்) நான் நுங்கை = உன் தங்கை
Delete