இடி நாகப் பாம்பைத் தாக்கும் என்று சங்கப்
பாடல்கள் கூறுகின்றன. உண்மையா? உண்மையே.
பாம்புக்குக் காது இல்லை. அதன் உடலில் மோதும்அதிர்வை அதன் எலும்புக்குள் இருக்கும் செவிப்புலனால் பாம்பு உணர்ந்துகொள்ளும். இடியின்
அதிர்வைப் பாம்பு உணர்ந்துகொள்ளும். இந்தப் பேரதிர்வு அதற்கு அச்சத்தை உண்டாக்கும்.
சினத்தால் அதன் பல்லுப்பையில் ஊறும் நச்சுத்தன்மை அச்சத்தால் அழியும். இடியால் பாம்பின்
நச்சுத்தன்மை முறிவதை கண்டறிந்துள்ள தமிழரின் அறிவு நுட்பம் வியப்புக்குறியது.
![]() |
| நாகம் |
- பாம்பின் பை பட இடிக்கும் கடுங்குரல் ஏறு - அகநானூறு 323
- அரவின் பைந்தலை துமிய உர உரும் உரறும் - அகநானூறு 202 பைந்தலை = தலையிலுள்ள நச்சுப் பை
- அரவு எறி உரும் - அகநானூறு 182

No comments:
Post a Comment