பவத்திரி என்பது ஓர் ஊர்.
தலைவி பவத்திரி போல் நல்லழகு கொண்டவள் என்று
நக்கீரர் பாடல் குறிப்பிடுகிறது.
கானல் என்பது கடலோரக் காடு.
பவத்திரி கானல் நிலத்தில் இருந்தது என்று பாடல்
குறிப்பிடுகிறது.
கழி என்பது கடல் கழிந்து நீர் தேங்குமிடம்.
பவத்திரி கழியில் அலை மிகுதி என்று பாடல்
கூறுகிறது.
இவற்றை மனத்தில் வைத்துக்கொண்டு பவத்திரி எது என
எண்ணுவோம்.
பாடல்
''செல்லா நல் இசை, பொலம் பூண், திரையன்
பல் பூங் கானற் பவத்திரி அன்ன இவள்
நல் எழில் இள நலம் தொலைய, ஒல்லென,
பௌவம் > பவ்வம் > பவம்
பவம் – பவத்து ஏரி – பவத்தேரி – பவத்திரி
அறிஞர் கருத்து
- பவத்திரி என்னும் ஊர் கிழக்குக் கடற்கரையில் தற்காலக் கூடுருக்கு அருகில் உள்ளது. - ஔவை சு துரைசாமிப் பிள்ளை விளக்கம்
- அவன் தலை நகரம் பவத்திரி (பவ்வத்திரி) ஆகலாம் என்பதும் அறியப் படும், பவத்திரி என்பது இன்றைய நெல்லூர் ஜில்லாவில், கூடூர்த் தாலூகாவில் உள்ள ரெட்டிபாளையம்' என்பதே ஆகும். - ஔவை சு துரைசாமிப் பிள்ளை விளக்கம்
- திருப்பதி என்னும் திருவேங்கடமலையை எல்லோரும் அறிவார்கள். வேங்கடமலையைச் சூழ்ந்திருக்கும் நாடுகளுக்கு வேங்கடக் கோட்டம் என்பது பழைய பெயர். இந்த வேங்கடக் கோட்டத்துக்குக் கிழக்கே கடற்கரையோரமாகப் பவத்திரிக் கோட்டம் என்னும் ஒரு நிலப்பரப்பு இருந்தது. பவத்திரிக் கோட்டம் ஒரு ஜில்லா (மாவட்டம்) அளவுள்ள நிலம். இந்தப் பவத்திரி நாட்டை 1800 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நக்கீரர் அகநானூறு 340ம் செய்யுளில் கூறுகிறார். இந்தப் பவத்திரிக் கோட்டம் கி.பி.11ம் நூற்றாண்டில் கடலில் மூழ்கிப் போயிற்று. கடலில் முழுகிப் போன பவத்திரிக் கோட்டம் இப்போது திருவேற்காடு ஏரி (பழவேற்காடு ஏரி - இராம.கி) என்று பெயர் பெற்று பெரும் நீர்ப்பரப்பாக இருக்கிறது. பவத்திரிக் கோட்டம் இருந்ததையும், அது கடலில் முழுகிப் போனதையும் பிற்காலத்துச் சோழ அரசர்களின் கல்வெட்டுக்கள் கூறுகின்றன. பவத்திரிக் கோட்டத்தில் இருந்த ஊர்களில் ஒன்று காகந்தி என்பது. "கடல்கொண்ட காகந்தி" என்று சோழர் கல்வெட்டுகள் கூறுகின்றன. நெடுங்காலமாகத் தொண்டைநாடின் கடற்கரையொரமாக இருந்த பவத்திரிக் கோட்டம் கடலில் முழுகிப் போய் இப்போது திருவேற்காடு ஏரியாய் மாறிப் போய்விட்டது. இந்த ஏரியின் தென்பகுதி இப்போது தமிழக அரசாட்சிக்கு உட்பட்டும், வடபகுதி ஆந்திர அரசுக்கு உட்பட்டும் இருக்கின்றன. (ஸ்ரீஹரிக் கோட்டா என்று இன்று சொல்லப்படும் விண்வெளி ஏவுகணைத் தளத்தின் பெயரில் பின்னுள்ள "கோட்டா" இந்தக் கோட்டமாய் இருக்க வாய்ப்பு உண்டு. ஸ்ரீஹரி என்னும் திரிவு எப்படி வந்தது, பவத்திரிக்கும் அதற்கும் உள்ள ஓசைத் தொடர்பு என்ன, என்று இன்னும் அறிந்தேன் இல்லை; தேடுகிறேன் - இராம.கி)
![]() |
| பழவேற்காடு ஏரி பறவைகள் புகலிடம் |

No comments:
Post a Comment