அழகிய விளிம்பு விசிந்து பாயும் மூங்கிலால்
செய்யப்பட்ட வில்லும், கூரிய முனையுள்ள அம்பும் வைத்திருக்கும் ஆண்கள் செவ்விய (செயிர்) பார்வையுடன் எய்ய, தன் பெண்மான் விழுந்தது என்று,
முறுக்கிய கொம்பு கொம்பு கொண்ட ஆண்மான் வருத்தத்துடன் நெடுந்தொலைவு சென்றது.
துள்ளி
விளையாடும் தன் குட்டிகளுடன் துன்பத்துடன் சென்றது.
மேயாமல் வருத்தத்துடன் சென்றது.
துன்பத்தால் களர்நிலப் பள்ளத்தில் (நெய்தல்) தேங்கியுள்ள
நீரையும் உண்ணவில்லை.
வேல் பாய்ந்த புண்ணுடன் கிடக்கும் வீரன் போலத் துன்பத்துடன் படுத்துக்
கிடந்தது.
இப்படிப் படுத்துக் கிடக்கும் பாதையில், பசுமை இல்லாமல் வெம்பிக் கிடக்கும்
பாழ்நிலப் பாதையில் நான் செல்கிறேன்.
நெஞ்சே!
நம் காதலி நம்மைக் காட்டிலும் துன்புற்று
கண் பனி பொழிய அழுதுகொண்டிருப்பாள்.
அவள் நிலைமை என்ன ஆகுமோ?
- காதலி – நாம் இருந்தபோது போது முடித்த கூந்தலை உடையவள்
- போது – மலரும் பூ. அவள் சூடிய பூ. “தெளிந்த நீரை உடைய சுனையில் பூத்திருப்பது போல் தோன்றுகிறதே” என்று தேன் தேடும் பறவைகள் விரும்பும் பூ
பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை பாலை
அவ் விளிம்பு உரீஇய
விசை அமை நோன் சிலை,
செவ் வாய்ப் பகழி,
செயிர் நோக்கு ஆடவர்
கணை இடக் கழிந்த
தன் வீழ்துணை உள்ளி,
குறு நெடுந் துணைய
மறி புடை ஆட,
புன்கண் கொண்ட திரி
மருப்பு இரலை 5
மேய் பதம் மறுத்த
சிறுமையொடு, நோய் கூர்ந்து,
நெய்தல்அம் படுவில் சில் நீர்
உண்ணாது,
எஃகு உறு மாந்தரின்
இனைந்து கண்படுக்கும்,
பைது அற வெம்பிய
பாழ் சேர் அத்தம்,
எமியம் நீந்தும் எம்மினும்,
பனி வார்ந்து, 10
என்னஆம் கொல் தாமே
''தெண் நீர்
ஆய் சுனை நிகர்
மலர் போன்ம்'' என நசைஇ
வீ தேர் பறவை
விழையும்
போது ஆர் கூந்தல்
நம் காதலி கண்ணே?
பொருள்வயிற் பிரிந்து போகாநின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச்
சொல்லியது.
எயினந்தை மகன் இளங்கீரனார் பாடல்
கி.மு.
காலத்துப் பாடல்
A hunter of arid track shoots down a female deer using his bow and arrow.
The male deer runs away for a distance.
The calves play with the male without knowing any pain in mind.
But the male worries on the loss.
It does not grass; and drink water standing aside.
It lies on ground as a wounded warrior with feeling pain in mind.
I am passing through such a painful route.
You, my mind!
Have you seen the future of my lover?
She will be dropping tears.
Once, her eyes were as beautiful as the petals of water lily in pond; she appeared wearing flowers on her braided hair.
What shall I do?
The man on his way on earning wealth is thinking in this way.
No comments:
Post a Comment