பரத்தை பிணக்கிக்கொண்டால் நான் வேண்டுமா?
இதுதான்
உன் பெருமையா?
மனைவி கணவனைக் கேட்கிறாள்.
1
மகிழ்ந!பாலியலில் மகிழ்ந்திருப்பவன் எனப் பெயர்பெற்றவன் நீ.என்னை விரும்பாமல் அகன்று நில்.மீன் தின்னும் நாரை பொய்கைக் கரைப் பிரம்படியில் சிறிது நேரம் தங்கும்.முள்ளோடு கூடிய ஈங்கை மலரோடு சிறிது நேரம் தங்கும்.மாந்தளிர் தடவும்படிச் சிறிது நேரம் தங்கும்.இப்படிக் குருகு வாழும் ஊரில் நெல்வளம் மிக்க தெருவில் வாழும் மகிழ்நன் நீ.
2
இதுதான் உன் செம்மாபா?ஒருத்தி உன்னை இகழ்ந்து பேசினாள்.அவள் நிலாப் போன்ற முகம் கொண்டவள்.சிவந்த மலர் போன்ற கண்ணை உடையவள்.அந்தக் கண்ணால் உனக்குக் காமம் உண்டாகும்படிப் பார்த்தாள்.நீ அணிந்திந்த மாலையைப் பிடித்து இழுத்தாள்.அவள் உன்னோடு சிறிது பிணக்குப் போட்டுக்கொண்டாள் என்று நான் வாழும் தெருவுக்கு வந்திருக்கிறாய். அப்படித்தானே!
பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை, மருதம்
1
பெரும் பெயர் மகிழ்ந!
பேணாது அகன்மோ!
பரந்த பொய்கைப் பிரம்பொடு
நீடிய
முட் கொம்பு ஈங்கைத்
துய்த் தலைப் புது வீ
ஈன்ற மாத்தின் இளந்
தளிர் வருட,
வார் குருகு உறங்கும்
நீர் சூழ் வள வயல் 5
கழனிக் கரும்பின் சாய்ப்
புறம் ஊர்ந்து,
பழன யாமை பசு
வெயில் கொள்ளும்
நெல்லுடை மறுகின் நன்னர் ஊர!
2
இதுவோ மற்று நின்
செம்மல்? மாண்ட
மதி ஏர் ஒள்
நுதல் வயங்கு இழை ஒருத்தி 10
இகழ்ந்த சொல்லும் சொல்லி,
சிவந்த
ஆய் இதழ் மழைக்
கண் நோய் உற நோக்கி,
தண் நறுங் கமழ்
தார் பரீஇயினள், நும்மொடு
ஊடினள் சிறு துனி
செய்து எம்
மணல் மலி மறுகின்
இறந்திசினோளே. 15
தோழி தலைமகற்கு வாயில்
மறுத்தது
மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச்
சாத்தனார் பாடல்
கி.மு.
காலத்துப் பாடல்
No comments:
Post a Comment