தோழி தலைவியைத் தேற்றுகிறாள்.
இளவேனில் வந்துவிட்டது.
- ஈவதில் குறைவு இல்லாமல், அறநெறியில் ஒழுகும் தீதில்லாதவன் செல்வம் பெருகுவது போல ஆற்றங்கரை மரம் தழைத்திருக்கிறது.
- அறிந்தும் அறியாத மடமொழியும், பெண்மான் போன்ற மருண்ட நோக்கமும் கொண்ட காதல்மகளின் புன்னகை போல மௌவல் மலர்கள் மலர்ந்துள்ளன.
- காதலனைப் புணர்ந்த கட்டழகியின் கூந்தல் போல், பூந்தாதும், தளிர்களும் உதிர்ந்து ஆற்று வரிமணல் தன் அழகைக் காட்டுகிறது.
- அறிவில்லாதவனாய் போர் புரியும், பெருமிதம் இல்லாத அரசன் நாட்டில் பகைவன் படை வந்து தாக்குவது போல இளவேனில் காலம் வந்து என்னைத் தாக்குகிறது.
தரவு
- பூத்திருக்கும் மரத்தில் குயில் கூவுவது போல, பூத்திருக்கும் என் மேனி அழகு சாய்ந்து புலம்பிக் கூவிக்கொண்டு இருக்கிறேன். இந்த நிலையில் என்னை மறந்தால் அவர் மறந்துவிட்டுப் போகட்டும். அணிகலன் பூத்த மேனியுடன் அழகியர் நடமாடும் புகழ் பூத்திருக்கும் கூடல் நகரையுமா மறந்திருக்கிறார்?
- திருப்பரங்குன்றில் மயில் ஆடுகிறது. என்னை அலர் தூற்றுகின்றனர். நான் நலம் கெட்டுக் கிடக்கிறேன். என்னை மறந்தால் மறந்துவிட்டுப் போகட்டும். பகைவரை வென்று, கடலில் சூரபன்மனைக் கொன்ற முருகன் குன்றத்தில் நிகழும் விளையாட்டுகளையுமா மறந்திருக்கிறார்?
- கண்ணில் மை தீட்டி மகிழ்வித்துவிட்டு, பொய் சொல்லி ஏமாற்றிவிட்டுப் போனவர் என்னை மறந்தாலும் மறந்துவிட்டுப் போகட்டும். தை மாதத்தில் மகளிர் தோழிமாருடன் வையை ஆற்று மணலில் விளையாடும் திளைப்பையுமா மறந்திருக்கிறார்?
தாழிசை
என்றெல்லாம் சொல்லிக்கொண்டு,
தனிச்சொல்
நெஞ்சு நோக வருந்த வேண்டாம் தோழி.
“நான் இல்லாத தனிமையில், நடுங்கும் மாலை
வேளையில், காமவேள் திருவிழா என்றால் கலங்குவாள்” என்று எண்ணி உன் காதலர் தேரேறி விரைந்து
வருகிறார். வருந்தவேண்டாம் என்று சொல்லித் தோழி தலைவியைத் தேற்றுகிறாள்.
சுரிதகம்
![]() |
மௌவல் |
பாடல் – சொல் பிரிப்புப் பதிவு
'ஈதலில் குறை காட்டாது,
அறன் அறிந்து ஒழுகிய
தீதிலான் செல்வம் போல், தீம்
கரை மரம் நந்த;
பேதுறு மட மொழி,
பிணை எழில் மான் நோக்கின்;
மாதரார் முறுவல் போல்,
மண மௌவல் முகை ஊழ்ப்ப;
காதலர்ப் புணர்ந்தவர் கதுப்புப் போல், கழல்குபு 5
தாதொடும் தளிரொடும், தண் அறல் தகை
பெற;
பேதையோன் வினை வாங்க, பீடு
இலா அரசன் நாட்டு,
ஏதிலான் படை போல,
இறுத்தந்தது, இளவேனில்
தரவு
நிலம் பூத்த மரமிசை
நிமிர்பு ஆலும் குயில் எள்ள,
நலம் பூத்த நிறம்
சாய, நம்மையோ மறந்தைக்க; 10
கலம் பூத்த அணியவர்
காரிகை மகிழ் செய்ய,
புலம் பூத்து, புகழ்பு
ஆனாக் கூடலும் உள்ளார்கொல்?
கன்மிசை மயில் ஆல,
கறங்கி ஊர் அலர் தூற்ற,
தொல் நலம் நனி
சாய, நம்மையோ மறந்தைக்க;
ஒன்னாதார்க் கடந்து அடூஉம், உரவு
நீர் மா கொன்ற, 15
வென் வேலான் குன்றின்மேல்
விளையாட்டும் விரும்பார்கொல்?
மை எழில் மலர்
உண்கண் மரு ஊட்டி மகிழ்
கொள்ள,
பொய்யினால் புரிவுண்ட நம்மையோ மறந்தைக்க;
தைஇய மகளிர் தம்
ஆயமோடு அமர்ந்து ஆடும்
வையை வார் உயர்
எக்கர் நுகர்ச்சியும் உள்ளார்கொல்;' 20
மூன்றும்
தாழிசை
என ஆங்கு,
தனிச்சொல்
நோய் மலி நெஞ்சமோடு
இனையல், தோழி!
நாம் இல்லாப் புலம்பாயின்,
நடுக்கம் செய் பொழுதாயின்,
காமவேள் விழவாயின், 'கலங்குவள்
பெரிது' என,
ஏமுறு கடுந் திண்
தேர் கடவி, 25
நாம் அமர் காதலர்
துணை தந்தார், விரைந்தே.
சுரிதகம்
தலைவன் குறித்துப்
பிரிந்த இளவேனில் வரவின்கண்
எம்மையோ மறக்க,
இக்காலத்து இவ்வூரின்கண்
தாம் விளையாடும் விளையாட்டும் மறந்தாரோ
எனச் சொல்லி ஆற்றாளாய
தலைவிக்கு,
தோழி தலைவன் வரவுணர்ந்து
கழியுவகையாற் கூறியது.
பாடியவர் – பாலைபாடிய பெருங்கடுங்கோ
எண் - 27
திணை - பாலை
கி.மு. காலத்துப் பாடல்
No comments:
Post a Comment