Pages

Monday, 8 August 2016

பரிபாடல் Paripadal 22

இது முருக்கம் பூ
மகளிரின் வாய் இதழ்
இந்தப் பூப் போல இருக்கும்
என்பர் 
சிதைந்துபோன இந்தப் பாடலில் வையைப் புனலில் சீராடச் செல்லும் மைந்தர், மகளிர் சிறப்புகள் தடுமாறிக் கிடக்கின்றன.  
1
ஒளி வீசும் வாளினை உடைய பொருப்பனாகிய பாண்டியன் (பொதியமலைத் தலைவன்) போர்க்களத்தில் நிறுத்திய யானைப்படை போல மேகங்கள் திரண்டன. போரில் அரசர்களை வென்று அவன் முரசு முழங்குவது போல இடி முழங்கிற்று. அவன் வில் பகைவர்மீது அம்புகளைப் பாய்ச்சுவது போல மழைநீர் தாரைகள் விழுந்தன. அவன் வேல் போல மின்னிற்று. அவன் வழங்கும் கொடை போல் மழை பொழிந்தது. அவன் படை போல மண்ணெல்லாம் மழை. மேலும் உள்ள செய்திகள் சிதைந்துள்ளன.
2
பன்முகத் தீச்சுடர், பவளம், அகில் போன்ற புகைக்கும் பொருள்கள், சந்தனம், வீசும் மணப்பொருள், மணநீர் விசிறும் எக்கிகள், நீரில் உடுத்தும் ஈரணி, நிலத்தில் உடுத்தும் நறவணி, பூந்துணி முதலானவற்றை வையையில் நீராடச் செல்வோர் கொண்டு சென்றனர். வேலைப்பாடு அமைந்த மாலை, குளுமை தரும் வெட்சிப்பூ மாலை முதலானவற்றை அணிந்துகொண்டு சென்றனர். குதிரை, யானை, மணி கட்டிய வேசரி வண்டி முதலானவற்றில் சென்றனர். வையைக் காட்டிலும், கரையிலும்  நெருக்கமாகத் திரண்டனர்.
3
வேல் ஆற்றும் மொய்ம்பன் முருகன் போலவும், விரைமலர் எய்யும் காமன் போலவும், வீரக்கழல் அணிந்த மைந்தர் சென்றனர். மாலை அணிந்த மைந்தர் தவம் செய்தவர் போலக் காணப்பட்டனர். மகளிர் மேகம் போன்ற கூந்தல், கயல் போன்ற கண், முருக்கம்பூ போன்ற வாயிதழ், கச்சம் கட்டிய கொம்மை முலை, மேகலை ஆகியவற்றுடன் பல்வரிசையில் சிரிப்பு பொங்க வந்து வையைக்கு அழகு சேர்த்தனர். மைந்தரும் மகளிரும் வையைக்கு அழகு சேர்க்கின்றனரா, வையை வெள்ளம் இவர்களுக்கு அழகு சேர்க்கிறதா என்று ஆய்ந்தறிய முடியாத நிலைமை வையைக்கு உண்டாயிற்று.
4
முழவிசைக்கு ஏற்ப வெள்ள ஓசை கேட்டது. யாழிசைக்கு ஏற்ப பூக்களில் வண்டுகள் ஒலித்தன. குழல் ஊதுவது போலத் தும்பிகள் பூவில் ஊதின. பூங்கொடிகள் அசைந்தாடின. இவை திருமருத-முன்துறையின் நிகழ்வுகள்.
5
மகளிர் கூந்தல் அவர்களின் தோளில் துவண்டது. மகளிர் துவளும் கொடி போல் அசைந்தனர். வையையின் சிறப்பு இவ்வாறு இருந்தது.

பாடல்சொல் பிரிப்புப் பதிவு
22. வையை
1
ஒளிறு வாட்பொருப்பன் உடல் சமத்து இறுத்த
களிறு நிரைத்தவைபோல் கொண்மூ நெரிதர,
அரசு படக் கடந்த ஆனாச் சீற்றத்தவன்
முரசு அதிர்பவைபோல் முழங்கு இடி பயிற்றி,
ஒடுங்கார் உடன்றவன் தானை வில் விசை      5
விடும் கணை ஒப்பின் கதழ் உறை சிதறூஉ,
கண் ஒளிர் எஃகின் கடிய மின்னி, அவன்
வண்மைபோல் வானம் பொழிந்த நீர் - மண்மிசை
ஆனாது வந்து தொகுபு ஈண்டி, மற்று-அவன்
தானையின் ஊழி...... தாவூக் கத்தின்,  10
போன நிலம் எல்லாம் போர் ஆர் வயல் புகுத-
.... ... ... நீக்கிப் பு...
கான மலைத்தரை கொன்று மணல பினறீ
வான மலைத்த ......
....... லைத்தவ மண முரசு எறிதர,           15
தானைத் தலைத்தலை வந்து மைந்து உற்று,
2
பொறிவி யாற்றுறி - துவர், புகை, சாந்தம்,
எறிவன எக்குவ ஈரணிக்கு ஏற்ற
நறவு அணி பூந் துகில் நன் பல ஏந்தி,
பிற தொழின ... ம் பின்பின் தொடர;                       20
செறி வினைப் பொலிந்த செம் பூங் கண்ணியர்,
ஈர் அமை வெட்சி இதழ் புனை கோதையர்,
தார் ஆர் முடியர், தகை கெழு மார்பினர்;
மாவும், களிறும், மணி அணி வேசரி,
காவு நிறையக் கரை நெரிபு ஈண்டி;                        25
3
வேல் ஆற்றும் மொய்ம்பனின், விரை மலர் அம்பினோன்-
போல், ஆற்று முன்பின் புனை கழல் மைந்தரொடு,
தார் அணி மைந்தர் தவப் பயன் சான்மென-
கார் அணி கூந்தல், கயற் கண், கவிர் இதழ்,
வார் அணி கொம்மை, வகை அமை மேகலை,          30
ஏர் அணி இலங்கு எயிற்று, இன் நகையவர்-
'சீர் அணி வையைக்கு அணிகொல்லோ? வையைதன்
நீர் அணி நீத்தம் இவர்க்கு அணிகொல்?' எனத்
தேருநர் தேருங்கால், தேர்தற்கு அரிது காண்-
தீரமும் வையையும் சேர்கின்ற கண் கவின்.               35
4
மண் கணை முழவின் இன் கண் இமிழ்விற்கு
எதிர்வ பொருவி ..... மேறு மாறு இமிழ்ப்ப,
கவர் தொடை நல் யாழ் இமிழ, காவில்
புகர் வரி வண்டினம் பூஞ் சினை இமிர,
ஊது சீர்த் தீம் குழல் இயம்ப, மலர்மிசைத்  40
தாது ஊது தும்பி தவிர்பு அல இயம்ப,
....... துடிச் சீர் நடத்த வளி நடன்
மெல் இணர்ப் பூங் கொடி மேவர நுடங்க,
ஆங்கு அவை தத்தம் தொழில் மாறு கொள்ளும்-
தீம் புனல் வையைத் திருமருத முன்துறையால்.  45
5
கோடு உளர் குரல் பொலி ஒலி துயல் இருங் கூந்தல்,
... ... ... புரை தீர் நெடு மென்
தோள் தாழ்பு தழை மலர் துவளா வல்லியின்,
நீள் தாழ்பு தோக்கை, நித்தில அரிச் சிலம்பு,
... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... 50
                               
காலம்கி. பி. மூன்றாம் நூற்றாண்டுக்கு முன்

No comments:

Post a Comment