Pages

Sunday, 28 August 2016

அகநானூறு Agananuru 214

பாசறையில் இருக்கும் தலைவனின் புலம்பல்.

1
வானம் பகல் தெரியாமல் இருண்டுகிடக்கிறது. 
போர்க்களிறுகள் நடுங்கும்படி அழி-மழை பொழிகிறது. 
அரசன் வேல் மின்னும் பாசறையைப் பார்த்துக்கொண்டிருக்கிறாள். 
பகைவரை வென்று புகழ் பெறவேண்ணடும் என்று தூங்காமல் இருக்கிறான். 
போர் என் கையில் இருக்கிறது.
2
நம்முடையவர் என்று எண்ணித் தெளிந்த உள்ளத்தோடு இருக்கும் என் மனைவி என்ன ஆவாளோ? 

அங்கே, மழை பொழியும் மாலை வேளையில், கழுத்தில் மணி கட்டியிருக்கும் மேய்ச்சல் பசுக்களை ஓட்டிக்கொண்டு கோவலர் இல்லம் திரும்புவர். 

கையில் உள்ள யாழில் ஆம்பல் பண்ணும், செவ்வழிப் பண்ணும் கூட்டி இசைத்துக்கொண்டு இல்லம் திரும்புவர். 

அந்த இசை தனிமையில் இருக்கும் அவளது உயிரை வருத்திக்கொண்டிருக்கும்.

இங்கே நான் இப்படி. 
அங்கே அவள் அப்படி. 
நெஞ்சம் துடிக்கிறது.

பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை, முல்லை

1
அகல் இரு விசும்பகம் புதையப் பாஅய்,
பகல் உடன் கரந்த, பல் கதிர், வானம்
இருங் களிற்று இன நிரை குளிர்ப்ப வீசி,
பெரும் பெயல் அழி துளி பொழிதல் ஆனாது;
வேந்தனும் வெம் பகை முரணி ஏந்து இலை,            5
விடு கதிர் நெடு வேல் இமைக்கும் பாசறை,
அடு புகழ் மேவலொடு கண்படை இலனே;
அமரும் நம் வயினதுவே; நமர் என
2
நம் அறிவு தெளிந்த பொம்மல் ஓதி
யாங்கு ஆகுவள் கொல் தானே ஓங்கு விடைப் 10
படு சுவற் கொண்ட பகு வாய்த் தெள் மணி
பெயர் கோவலர் ஆம்பலொடு அளைஇ,
பையுள் நல் யாழ் செவ்வழி வகுப்ப,
ஆர் உயிர் அணங்கும் தெள் இசை
மாரி மாலையும் தமியள் கேட்டே?                      15

பாசறைக்கண் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.
வடம வண்ணக்கன் பேரி சாத்தனார் பாடல்

கி.மு. காலத்துப் பாடல்
பல் ஆன் கோவலன் |
மாடு மேய்க்கும் கோவலன் 

No comments:

Post a Comment