கவனக் குறைவுக்காகக் கண்ணைத் தோண்டிய தண்டனை.
இனவெறி
இனப் பிரிவினை
சமைக்கும் பானையைத் தொட்டுக்கொண்டு சத்திய ஆணை போடுகிறாள்.
1
கொடி கட்டிப் பறக்க விட்டுக்கொண்டு நறவுக்கள் விற்கும் ஊரில், அன்று துறையில் பிடித்துவந்த வரால்மீன் துண்டுகளை பண்டமாற்று விலையாகக் கொடுத்து வாங்கி உண்டுவிட்டு வேட்டைக்குச் செல்லாமல் கணவன் உறங்கிக்கொண்டிருப்பான்.அவனுக்கு அவன் மனைவி (பாட்டி) ஆம்பல் இலையில் பொங்கல் சோறும் (அமலை), புளிக்குழம்பும், பிரம்புப் பழமும் விடியற்காலத்தில் தருவாள்.இப்படித் தரும் ஊரினை உடையவன் அந்த ஊரன்.
2
கணவன் பரத்தையிடம் இருந்துவிட்டு மனைவியிடம் வருகிறான்.
தலைவி தடுத்துச் சொல்கிறாள்.சமைக்கும் பானையைத் தொட்டுக்கொண்டு சொல்கிறேன்.
என்னிடம் நெருங்கி வராதே.
இது போல நிகழ்ந்துவிடும்.அருகில் வராதே.உனக்கு நல்லவளாகிய அவளைத் தருவிய மார்போடு அருகில் வராதே.
பாடல் சொல் பிரிப்புப்
பதிவு
திணை, மருதம்
1
நெடுங் கொடி நுடங்கும் நறவு மலி பாக்கத்து,
நாள் துறைப்பட்ட மோட்டு இரு வராஅல்
துடிக்கண் கொழுங் குறை நொடுத்து, உண்டு ஆடி,
வேட்டம் மறந்து, துஞ்சும் கொழுநர்க்குப்
பாட்டி
ஆம்பல் அகல் இலை, அமலை வெஞ் சோறு 5
தீம் புளிப் பிரம்பின் திரள்கனி பெய்து,
விடியல் வைகறை இடூஉம் ஊர!
2
தொடுகலம்; குறுக வாரல் தந்தை
கண் கவின் அழித்ததன் தப்பல், தெறுவர,
ஒன்றுமொழிக் கோசர்க் கொன்று, முரண் போகிய, 10
கடுந் தேர்த் திதியன் அழுந்தை, கொடுங் குழை
அன்னி மிஞிலியின் இயலும்
நின் நலத் தகுவியை முயங்கிய மார்பே.
பரத்தையிற் பிரிந்து வந்த தலைமகற்குச் கிழத்தி
சொல்லியது.
பரணர் பாடல்
கி.மு. காலத்துப் பாடல்
No comments:
Post a Comment