நள்ளிரவும் ஒத்துவராது
என்கிறாள்.
1
நிலா போன்ற முகம்.ஆனால் களங்கம் இல்லாத முகம்.அந்த முகத்தில் பொன் வண்ணம் பூக்கலாயிற்று.அம்மா! இனி இவள் என்ன ஆவாளோ?
2
தினை, கதிர் வாங்கியுள்ளது.வானவில் போன்ற தட்டையில் கதிர் வாங்கியுள்ளது.சிவந்த வாயை உடைய பச்சைக் கிளி சிதைத்துத் தின்னும்படிக் கதிர் வாங்கியுள்ளது.தட்டை தாங்க முடியாமல் வருந்தும்படிக் கதிர் வாங்கியுள்ளது.வளைந்த கைச்சிறகை உடைய யானை கூட்டமாக வந்து உண்ணும்படிக் கதிர் வாங்கியுள்ளது.
3
மலை நாடனே!பலத்த மழை பொழியும் உயர்ந்த முகடுகளைக் கொண்ட மலையின் அரசனே!நள்ளிரவில் நீ இங்கு வந்து இவளுக்கு இன்பக்கொடை வழங்க விரும்பினால் அது இயலாது.பாம்பு உமிழ்ந்த மணிக்கற்களை அருவிநீர் அடித்துக்கொண்டு வந்து தெருவில் போட்டிருப்பதால் அவை தெருவிளக்குப் போல ஒளி வீசுகின்றன.(பாம்பு மணி உமிழுமா?)பிறர் உன்னைப் பார்த்துவிடுவார்கள்.விரிந்திருக்கும் உன் மார்பு இவளுக்குப் பயன்படாமல் போய்விடும் போல் தோன்றுகிறது.தோழி தலைவனிடம் இவ்வாறு சொல்வதானது, தினைப்புனம் காக்கும் இடத்துக்கு வருக என்று கூறுவது போல் இருக்கிறது.
பாடல் சொல் பிரிப்புப்
பதிவு
திணை, குறிஞ்சி
1
மதி இருப்பன்ன மாசு அறு சுடர் நுதல்
பொன் நேர் வண்ணம் கொண்டன்று; அன்னோ!
யாங்கு ஆகுவள்கொல் தானே? விசும்பின்
2
எய்யா வரி வில் அன்ன பைந் தார்,
செவ் வாய், சிறு கிளி சிதைய வாங்கி, 5
பொறை மெலிந்திட்ட புன் புறப் பெருங் குரல்
வளை சிறை வாரணம் கிளையொடு கவர,
ஏனலும் இறங்குபொறை உயிர்த்தன; பானாள்
3
நீ வந்து அளிக்குவை எனினே மால் வரை
மை படு விடரகம் துழைஇ, ஒய்யென 10
அருவி தந்த, அரவு உமிழ், திரு மணி
பெரு வரைச் சிறுகுடி மறுகு விளக்குறுத்தலின்,
இரவும் இழந்தனள்; அளியள் உரவுப் பெயல்
உரும் இறை கொண்ட உயர்சிமைப்
பெரு மலைநாட! நின் மலர்ந்த மார்பே. 15
தோழி தலைமகனைச் செறிப்பு அறிவுறீஇ இரவுக்
குறி மறுத்தது.
பொதும்பில் கிழான் வெண்கண்ணனார் பாடல்
கி.மு. காலத்துப் பாடல்
No comments:
Post a Comment