Pages

Monday, 18 July 2016

தருக்க விளக்கம் TarukkaVilakkam A note

நூல் விளக்கம்
அளவியல் என்னும் தருக்க விளக்கம் என்பது ஒரு நூல். மனத்தால் அளக்கும் பாங்கினை இது கூறுகிறது. 
இதனை இயற்றியவர் மயிலை சோமசுந்தரப் பிள்ளை.

தருக இயலில் வல்ல இவரது ஆசிரியர் கிருட்டிணாச்சாரி, பாலசரசுவதி நாராயண சாத்திரி, மருபுரவாசி கணபதி சாத்திரி ஆகியோர் வடமொழி நூற்பாவால் இந்த நூலைப் பாராட்டியுள்ளனர்.

முத்து வைத்தியநாத தேசிகர் முதலான அறுவர் இந்த நூலுக்குத் தமிழ்ப் பாக்களில் சிறப்புப் பாயிரம் அளித்துள்ளனர்.

எண் எனினும், தருக்கம் எனினும் ஒக்கும் என்று இந்நூலின் முகவுரையில் கூறப்பட்டுள்ளது.

தருக்க சங்கிரக தீபிகை என்னும் பெயரில் சிவஞான முனிவர் தமிழில் பொழிபெயர்த்து எழுதிய நூலுக்கு இது விளக்கமாக அமையும் என்றும் முகவுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிவஞான யோகிகள் வரலாறு 14 விருத்தப் பாடல்களில் கூறப்பட்டுள்ளன.
தருக்கம் பற்றி எழுந்துள்ள நூல்கள்
தருக்க விளக்கம் பாயிரம் – 53 பாடல்கள்
பிறவும் இந்த நூலில் உள்ளன.

No comments:

Post a Comment