![]() |
| பச்சோந்தி |
ஒப்புநோக்குக
பிறர்க்கு என
முயலுநர் உண்மையான், உண்டால் அம்ம இவ்வுலகம்.
பச்சோந்தி
தன்னைப் பாதுகாத்துக்கொள்ள,
சூழலுக்கு ஏற்ப,
தன் நிறத்தை மாற்றிக்கொள்ளும்
ஒரு விந்தையான உயிரினம்.
பாடல் சொல் பிரிப்புப் பதிவு
பாடல் – பாலை
கல்
ஊற்று ஈண்டல
கயன் அற
வாங்கி
இரும் பிணர்த் தடக் கை நீட்டி நீர் நொண்டு
பெருங் கை யானை பிடி எதிர் ஓடும்
கானம் வெம்பிய வறம் கூர் கடத்திடை
வேனில் ஓதி நிறம் பெயர் முது போத்து
பாண் யாழ் கடைய வாங்கி, பாங்கர்
நெடு நிலை யாஅம் ஏறும் தொழில
பிறர்க்கு என முயலும் பேர் அருள் நெஞ்சமொடு
காமர் பொருட் பிணி போகிய
நாம் வெங் காதலர் சென்ற ஆறே
இரும் பிணர்த் தடக் கை நீட்டி நீர் நொண்டு
பெருங் கை யானை பிடி எதிர் ஓடும்
கானம் வெம்பிய வறம் கூர் கடத்திடை
வேனில் ஓதி நிறம் பெயர் முது போத்து
பாண் யாழ் கடைய வாங்கி, பாங்கர்
நெடு நிலை யாஅம் ஏறும் தொழில
பிறர்க்கு என முயலும் பேர் அருள் நெஞ்சமொடு
காமர் பொருட் பிணி போகிய
நாம் வெங் காதலர் சென்ற ஆறே
இரும்பிணர்த்
தடக்கை = பெரிய மடிப்புப் பிடிப்புகள் கொண்ட வளைந்த கை
பெருங்கை
= பெரிய கை
பிரிவிடை
மெலிந்த தோழிக்குத்
தலைவி சொல்லியது
ஆசிரியர்
பெயர் தெரியவில்லை
கி.மு. 2 ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய பாடல்

No comments:
Post a Comment