Pages

Friday 8 July 2016

நற்றிணை Natrinai 152

வடந்தை
மடன்மா


என் காம உணர்வு, என்னை மடல் குதிரைமேல் ஏறி வந்து, இவளைப் பெறுக என்று கூறுகிறது. 

ஊர் தூற்றும் பழிக்கு மடல்-மா மேல் வரும்போது சூடும் எருக்கம்பூ தானே மாலை. 
வெயில் குறைந்து மாலை நேரம் வந்துவிட்டது. 
தனிமையில் கிடக்கிறேன். 
வாடைக்காற்று தூறல் திவலைகளை வீசுகிறது. 
கூட்டில் இருக்கும் ஆண் அன்றில் தன் பெண் பறவையுடன் உடலுறவு கொள்ளக் குரல் கொடுக்கிறது. 
இரவு வேளையிலும் நான் கையற்றுக் கிடக்கிறேன். 

இவ்வாறு சொல்லிக்கொண்டு தலைவன் வருந்துகிறான்.

பாடல் சொல் பிரிப்புப் பதிவு
பாடல் – நெய்தல்

மடலே காமம் தந்தது அலரே
மிடை பூ எருக்கின் அலர் தந்தன்றே
இலங்கு கதிர் மழுங்கி எல் விசும்பு படர
புலம்பு தந்தன்றே புகன்று செய் மண்டிலம்
எல்லாம் தந்ததன் தலையும் பையென
வடந்தை துவலை தூவ, குடம்பைப்
பெடை புணர் அன்றில் உயங்கு குரல் அளைஇ
கங்குலும் கையறவு தந்தன்று
யாங்கு ஆகுவென்கொல் அளியென் யானே

மடல் வலித்த தலைவன்முன்னிலைப் புறமொழியாக தோழி கேட்பச் சொல்லியது
ஆலம்பேரி சாத்தனார் பாடல்

கி.மு. 2 ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய பாடல்

எருக்கம் பூ மாலை

No comments:

Post a Comment