Pages

Wednesday, 6 July 2016

நற்றிணை Natrinai 144

பேதை நெஞ்சம்


ஆண்யானையைப் புலி தாக்கும்போது அதன் பெண்யானை அஞ்சுகிறது. 
மழைமேகம் இடிக்கும்போது நாகம் அஞ்சுகிறது. 
அப்போதெல்லாம் மலரை வென்ற என் கண்கள் கலங்குகின்றன. 
நெஞ்சில் கவலை வாட்டுகிறது. 

இங்கே இந்த நிலைமை. 
அங்கே என்ன நடக்கிறது? 

பெண்புலி வேட்டையாடிக்கொண்டு திரியும் காட்டுப் பாதை. 
மணலை அரித்துக்கொண்டு வெள்ளம் பெருகிவரும் காட்டாறு. 
கரை புரண்டு ஓடும் ஆழமான நீர். 
அந்த வழியில் அவர் தனியே வருகிறார். 
நீந்திக்கொண்டு வருகிறார். 
நீந்தும்போது தோளில் படிந்த பூவோடு வருகிறார். 
இரவில் வருகிறார். 

இவற்றைப் பற்றி அறியாதவள் போல் இருக்கிறனே! 
தோழியிடம் இப்படிச் சொல்லிக்கொண்டு தலைவி கலங்குகிறாள்.

பாடல் சொல் பிரிப்புப் பதிவு
பாடல் – குறிஞ்சி

பெருங் களிறு உழுவை தாக்கலின் இரும் பிடி
கருவி மா மழையின் அரவம் அஞ்சுபு
போது ஏர் உண் கண் கலுழவும் ஏதில்
பேதை நெஞ்சம் கவலை கவற்ற
ஈங்கு ஆகின்றால் தோழி பகுவாய்ப்
பிணவுப் புலி வழங்கும் அணங்கு அருங் கவலை
அவிர் அறல் ஒழுகும் விரை செலல் கான் யாற்றுக்
கரை அருங் குட்டம் தமியர் நீந்தி
விரவு மலர் பொறித்த தோளர்
இரவின் வருதல் அறியாதேற்கே

ஆற்றது ஏதத்திற்குக் கவன்று சிறைப்புறமாகத் தலைவி சொல்லியது
கச்சிப்பேட்டுப் பெருந்தச்சனார் பாடல்

கி.மு. 2 ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய பாடல்

யானையைப் புலி தாக்குதல்

No comments:

Post a Comment