குற்றாத்து இறைவன் வீதியில் உலா வருகிறான்.
நாடகம் கட்டியக்காரன் (buffoon) வருகையில் தொடங்குகிறது.
தேர்கொண்ட வசந்த வீதிச் செல்வர்குற் றாலத்
தீசர்
பார்கொண்ட விடையில் ஏறும் பவனிஎச் சரிக்கை
கூற
நேர்கொண்ட புரிநூல் மார்பும் நெடியகைப் பிரம்பும்
ஆகக்
கார்கொண்ட முகிலே றென்னக் கட்டியக் காரன்
வந்தான்.
தேர்
கொண்ட வசந்த வீதிச் (தென்றல் வீசும் தெரு) செல்வர்
குற்றாலத்து ஈசர் பார் கொண்ட விடையில் (காளை) ஏறும்
பவனி எச்சரிக்கை கூற நேர் கொண்ட புரிநூல் மார்பும் நெடிய கைப் பிரம்பும் ஆகக் கார்
கொண்ட முகில் ஏறு என்னக் கட்டியக்காரன் வந்தான்.
பூமேவும் மனுவேந்தர் தேவேந்தர் முதலோரைப்
புரந்திடும் செங்கோலான பிரம்புடையான் மாமேருச் சிலையாளர் வரதர் குற்றால நாதர் வாசல்
கட்டியக்காரன் வந்தனனே! (நாடகத்தில் பேச்சு)
மூக்கெழுந்த முத்துடையார் அணிவகுக்கும் நன்னகர
மூதூர் வீதி
வாக்கெழுந்த குறுமுனிக்கா மறியெழுந்த கரங்காட்டும்
வள்ள லார்சீர்த்
தேக்கெழுந்த மறைநான்கும் சிலம்பெழுந்த பாதர்விடைச்
சிலம்பில் ஏறி
மேக்கெழுந்த மதிசூடிக் கிழக்கெழுந்த ஞாயிறுபோல்
மேவி னாரே.
மூக்கு
எழுந்த முத்து உடையார் அணி வகுக்கும் நல் நகர மூதூர் வீதி வாக்கு எழுந்த குறுமுனிக்கா
(அகத்தியருக்காக) மறி (ஆட்டுக்குட்டி) எழுந்த கரம் காட்டும் வள்ளலார் சீர்த் தேக்கு (தேன்)
எழுந்த மறை நான்கும் சிலம்பு எழுந்த பாதர் விடைச் சிலம்பில் ஏறி மேக்கு (மேற்கு) எழுந்த
மதி (வளர்பிறை) சூடிக் கிழக்கு எழுந்த ஞாயிறு போல் மேவினாரே.
1
பவனி வந்தனரே! மழவிடைப் பவனி வந்தனரே;
அவனி போற்றிய குறும்ப லாவுறை மவுனநாயகர்
எவன நாயகர்
சிவனு மாயரி அயனு மானவர் கவன மால்விடை அதனில்
ஏறியே
அண்டர் கூட்டமும் முனிவர் கூட்டமும் அசுரர்
கூட்டமும் மனிதர் ஆகிய
தொண்டர் கூட்டமும் இமைப்பி லாரெனச் சூழ்ந்து
தனித்தனி மயங்கவே
பண்டை நரரிவர் தேவர் இவரெனப் பகுத்து நிறுவிய
வேளை தொறுந்தொறும்
மண்ட லீசரை நந்தி பிரம்படி மகுட கோடியிற்
புடைக்கவே.
பவனி வந்தனரே! மழவிடைப் பவனி வந்தனரே;
அவனி
போற்றிய குறும் பலா உறை மவுன நாயகர் எவன (யவனம் = அழகு)
நாயகர் சிவனுமாய், அரி, அயனும் ஆனவர் கவன மால் விடை (திருமாலாகிய
கவனமுள்ள காளை) அதனில் ஏறியே, அண்டர் கூட்டமும், முனிவர் கூட்டமும், அசுரர்
கூட்டமும், மனிதர் ஆகிய தொண்டர் கூட்டமும், இமைப்பிலார் எனச் சூழ்ந்து தனித் தனி மயங்கவே,
பண்டை நரர் இவர் (நரர் = அரக்கர்) தேவர் இவர் எனப்
பகுத்து நிறுவிய வேளை தொறுந்தொறும் (வரும்போதெல்லாம்)
மண்டலீசரை (மண்டல ஈசர்) நந்தி பிரம்படி மகுட கோடியில்
புடைக்கவே. பவனி வந்தனரே! (நந்தி தன் கைப் பிரம்பால் அனைவர்
தலையிலும் புடைத்தார்)
2
தடுப்ப தொருகரம் கொடுப்ப தொருகரம் தரித்த
சுடர்மழு விரித்த தொருகரம்
எடுத்த சிறுமறி பிடித்த தொருகரம் இலங்கப்
பணியணி துலங்கவே
அடுத்த ஒருபுலி கொடுத்த சோமனும் ஆனை கொடுத்தவி
தானச் சேலையும்
உடுத்த திருமருங் கசைய மலரயன் கொடுத்த பரிகலம்
இசையவே.
பவனி வந்தனரே! மழவிடைப் பவனி வந்தனரே;
தடுப்பது
ஒரு கரம், கொடுப்பது ஒரு கரம், தரித்த சுடர் மழு விரித்தது ஒரு கரம், எடுத்த சிறு மறி
பிடித்தது ஒரு கரம், இலங்கப் பணி (பாம்பு) அணி (அணிகலன்) துலங்கவே, அடுத்த ஒரு புலி
(புலித்தோல்) கொடுத்த சோமனும் (நிலா) ஆனை கொடுத்த விதானச் சேலையும் (யானைத்தோல் ஆடை) உடுத்த திரு மருங்கு அசைய, மலர் அயன்
(பிரமன்) கொடுத்த பரிகலம் (பரிசுப் பொருள்கள்) இசையவே. பவனி வந்தனரே! மழவிடைப்
பவனி வந்தனரே;
3
தொடரும் ஒருபெருச் சாளி ஏறிய தோன்றல் செயப்படை
தாங்கவே
அடல்கு லாவிய தோகை வாகனத் தரசு வேல்வலம்
வாங்கவே
படலை மார்பினிற் கொன்றை மாலிகை பதக்க மணியொளி
தேங்கவே
உடைய நாயகன் வரவு கண்டுகண்டு உலகெலாந் தழைத்
தோங்கவே,
பவனி வந்தனரே! மழவிடைப் பவனி வந்தனரே;
தொடரும்
ஒரு பெருச்சாளி ஏறிய தோன்றல் (பிள்ளையார்) செயப்
படை தாங்கவே, அடல் குலாவிய தோகை வாகனத் தரசு (முருகன்)
வேல் வலம் வாங்கவே, படலை (பரந்த) மார்பினில் கொன்றை
மாலிகை (மாலை) பதக்க மணி யொளி தேங்கவே, உடைய நாயகன்
வரவு கண்டு கண்டு உலகு எலாம் தழைத்து ஓங்கவே, - பவனி வந்தனரே! மழவிடைப் பவனி வந்தனரே;
4
இடியின் முழக்கொடு படரும் முகிலென யானை மேற்கன
பேரி முழக்கமும்
துடியின் முழக்கமும் பரந்து திசைக்கரி துதிக்கை
யாற்செவி புதைக்கவே
அடியர் முழக்கிய திருப்ப லாண்டிசை அடைந்த
செவிகளும் துறக்க மூவர்கள்
வடிசெய் தமிழ்த்திரு முறைகள் ஒருபுறம் மறைகள்
ஒருபுறம் வழங்கவே.
பவனி வந்தனரே! மழவிடைப் பவனி வந்தனரே;
இடியின்
முழக்கொடு படரும் (வரும்) முகில் (மேகம்) என யானை மேல் கனபேரி (முரசு) முழக்கமும் துடியின் முழக்கமும் பரந்து திசைக்
கரி (திசை யானைகள்) துதிக்கையால் செவி புதைக்கவே,
அடியர் (அடியவர்) முழக்கிய திருப்பலாண்டு (திருப்பல்லாண்டு) இசை அடைந்த செவிகளும், துறக்க மூவர்கள்
வடி செய் தமிழ்த்திரு முறைகள் (மூவர் தேவாரம்)
ஒருபுறம், மறைகள் ஒருபுறம், வழங்கவே. - பவனி வந்தனரே! மழவிடைப் பவனி வந்தனரே;
5
கனக தம்புரு கின்ன ரங்களி ஆசை வீணை மிழற்றவே
அனக திருமுத்தின் சிவிகை கவிகைபொன் ஆல வட்டம்
நிழற்றவே
வனிதை மார்பல குஞ்சம் சாமரை வரிசை விசிறி
சுழற்றவே
தனதன் இந்திரன் வருணன் முதலிய சகல தேவரும்
வழுத்தவே.
பவனி வந்தனரே! மழவிடைப் பவனி வந்தனரே;
கனக
தம்புரு (தம்புரா) கின்னரம் களி ஆசை வீணை மிழற்றவே, அனக (நிறமில்லாப்
பளிங்கு) திரு முத்தின் சிவிகை (பல்லக்கு)
கவிகை (குடை) பொன் ஆலவட்டம் (விசிறி) நிழற்றவே (நிழல்
தர) வனிதைமார் (மகளிர்) பல குஞ்சம் சாமரை
வரிசை விசிறி சுழற்றவே, தனதன் (குபேரன்) இந்திரன்
வருணன் முதலிய சகல தேவரும் வழுத்தவே. - பவனி வந்தனரே! மழவிடைப் பவனி வந்தனரே;
6
சைவர் மேலிடச் சமணர் கீழிடச் சகல சமயமும்
ஏற்கவே
கைவ லாழியங் கருணை மாலொடு கமலத் தோன்புடை
காக்கவே
ஐவர் நாயகன் வந்த னன்பல அமரர் நாயகன் வந்தனன்
தெய்வ நாயகன் வந்த னன்னெனச் சின்னம் எடுத்தெடுத்
தார்ப்பவே.
பவனி வந்தனரே! மழவிடைப் பவனி வந்தனரே;
சைவர்
மேலிடச் சமணர் கீழிடச் சகல சமயமும் ஏற்கவே, கைவல் ஆழி அம் கருணை மாலொடு கமலத்தோன் புடை
காக்கவே, ஐவர் நாயகன் வந்தனன் பல அமரர் நாயகன் வந்தனன் தெய்வ நாயகன் வந்தனன் எனச் சின்னம்
எடுத்து எடுத்து ஆர்ப்பவே. - பவனி வந்தனரே! மழவிடைப் பவனி வந்தனரே;
7
சேனைப் பெருக்கமும் தானைப் பெருக்கமும் தேரின்
பெருக்கமும் தாரின் பெருக்கமும்
ஆனைப் பெருக்கமும் குதிரைப் பெருக்கமும்
அவனி முழுதினும் நெருங்கவே
மோனைக் கொடிகளின் காடு நெடுவெளி மூடி அடங்கலும்
ஓடி இருண்டபின்
ஏனைச் சுடர்விரி இடப கேதனம் எழுந்து திசைதிசை
விளங்கவே.
பவனி வந்தனரே! மழவிடைப் பவனி வந்தனரே;
சேனைப்
பெருக்கமும் தானைப் பெருக்கமும் தேரின் பெருக்கமும் தாரின் (முன்னே செல்லும் படை) பெருக்கமும் ஆனைப் பெருக்கமும்
குதிரைப் பெருக்கமும் அவனி முழுதினும் நெருங்கவே, மோனைக் (முன்னே
செல்லும் கொடி) கொடிகளின் காடு நெடு வெளி மூடி அடங்கலும் ஓடி இருண்டபின் ஏனைச்
சுடர் விரி இடப கேதனம் (காளை வாகனம்) எழுந்து திசை
திசை விளங்கவே. - பவனி வந்தனரே! மழவிடைப் பவனி வந்தனரே;
8
கொத்து மலர்க்குழல் தெய்வ மங்கையர் குரவை
பரவையை நெருக்கவே
ஒத்த திருச்செவி இருவர் பாடல்கள் உலகம் ஏழையும்
உருக்கவே
மத்த ளம்புயல் போன்மு ழங்கிட மயிலனார் நடம்பெ
ருக்கவே
சக்தி பைரவி கௌரி குழல்மொழித் தைய லாளிடம்
இருக்கவே.
பவனி வந்தனரே! மழவிடைப் பவனி வந்தனரே;
கொத்து
மலர்க் குழல் தெய்வ மங்கையர் குரவை (குரவையாட்டம்)
பரவையை (கடல்) நெருக்கவே, ஒத்த திருச் செவி இருவர்
(அப்பர், சம்பந்தர்) பாடல்கள் உலகம் ஏழையும் உருக்கவே,
மத்தளம் புயல் போல் முழங்கிட மயில் அனார் (போன்றவர்)
நடம் பெருக்கவே, சக்தி பைரவி கௌரி குழல்மொழித் தையலாளிடம் இருக்கவே. - பவனி வந்தனரே!
மழவிடைப் பவனி வந்தனரே;

No comments:
Post a Comment