![]() |
| சரபம் என்னும் பறவை |
பறவைகளின் பெயர்கள்
பெயர்களை அடுக்கி, திருமாலின் செயல்கள் இதில் விளக்கப்பட்டுள்ளன.
பெரிய கைகளுக்காக
வருந்தும் குருகுப் பறவையைத் திருமால் கொன்றான். உன் சக்கரவாளப் புள் தாக்க நீ
உறங்கும் பாம்பு குழைந்துபோயிற்றே அது எவ்வாறு? உலகை உண்டாக்கிக் காப்பாற்றுபவன்
நீ. அறச்சாலையில் அன்னமிட்டு உயிரினங்களைக் காப்பாற்றுவதற்காக ஒரு மாமரத்தின் கீழே
இருக்கும் கருங்குயிலே! (கருநிறக் கண்ணன்)
பாடல்
மாக்கைக்கிரங் குங்குருகும் வளர்சக்ரவாகப் புள்ளுந்
தாக்கச்சர பங்குழைந்த தெவ்வாறு சகதலத்தை
ஆக்கிப் பெருக்கித்திரு வறச்சாலையி லன்னமிட்டுக்
காக்கைக்கொரு கொக்கின்கீழே யிருக்குங் கருங்குயிலே .(150)
மாக் கைக்கு இரங்கும் குருகும் வளர் சக்ரவாகப் புள்ளும் தாக்கச் சரபம்
குழைந்தது எவ்வாறு சக தலத்தை ஆக்கிப் பெருக்கித் திரு அறச்சாலையில் அன்னம் இட்டுக் காக்கைக்கு
ஒரு கொக்கின் கீழே இருக்கும் கருங் குயிலே.
இது கட்டளைக்
கலித்துறையால் ஆன பாடல்.
’நேர்’ அசையில்
தொடங்கும் பாடல் ஒவ்வொரு அடியிலும்
ஒற்றும்
குற்றியலுகரமும் நீங்கலாக 16 எழுத்துக்களயும்,
’நிரை’ அசையில்
தொடங்கும் பாடல் அவ்வாறே 17 எழுத்துக்களையும் கொண்டிருக்கும்.
ஒவ்வொரு அடியும் 5 சீர்
கொண்டதாக இருக்கும்.
இடைப்பட்ட 4 தொடைகள்
‘வெண்டளை’ யாப்பில் அமையும்.
5 ஆம் சீர் ‘விளங்காய்’
வாய்பாடு கொண்டதாக இருக்கும்.
இந்தப் பாடலில் இந்த
இலக்கண அமைதிகளைக் கண்டுகொள்ளலாம்.
14 ஆம் நூற்றாண்டில் தஞ்சையிலிருந்து
அரசாண்ட விசயநகர மன்னன் திருமலைராயன் அவைக்களப் புலவர் அதிமதுரக் கவிராயர்
சொன்னபடியெல்லாம் பாடி வெற்றி கண்டவர் காளமேகப் புலவர்.

No comments:
Post a Comment