இமையோர் திரண்டு தொழும்
தென் அரங்க ஈசனார் (திருவரங்க நாதர்) கை கூப்பி நல்லாடை அணிந்துகொண்டு எதிர் சென்றதால், புற்றிடம்
கொண்ட திருவாரூர்த் தியாகேசர் எதிர்கொண்டார். ஐவருக்காகத் தேர் ஓட்டியவர் (அரங்கநாதர்) அன்றோ? தியாகேசர்
வெறுண்டு, புரண்டு ஒரு பற்றும் இல்லாமல் புற்றில் நுழைந்துகொண்டார்.
பாடல்
திரண்டிமையோர் தொழுந்தென் னரங்கேசர்முன் செங்கைகளா
றிரண்டுடையோனு மெதிர்சென்றதா லெதிர்ந்தார் தமைக்கண்
டருண்டெழு மைவர்க்குத் தேரூர்பவன் கொளனைவெருண்டு
புரண்டொரு பற்றைக் கடந்தொரு புற்றிற் புகுந்ததுவே .(149)
திரண்டு இமையோர் தொழும் தென் அரங்கேசர் முன் செங்கைகளால் திரண்டு உடையோனும் எதிர்சென்றதால் எதிர்ந்தார் தமைக் கண்டர் உண்டு எழும் ஐவர்க்குத் தேர் ஊர்பவன் கொளனை வெருண்டு புரண்டு
ஒரு பற்றைக் கடந்து ஒரு புற்றில் புகுந்ததுவே.
இது கட்டளைக்
கலித்துறையால் ஆன பாடல்.
’நேர்’ அசையில்
தொடங்கும் பாடல் ஒவ்வொரு அடியிலும்
ஒற்றும்
குற்றியலுகரமும் நீங்கலாக 16 எழுத்துக்களயும்,
’நிரை’ அசையில்
தொடங்கும் பாடல் அவ்வாறே 17 எழுத்துக்களையும் கொண்டிருக்கும்.
ஒவ்வொரு அடியும் 5 சீர்
கொண்டதாக இருக்கும்.
இடைப்பட்ட 4 தொடைகள்
‘வெண்டளை’ யாப்பில் அமையும்.
5 ஆம் சீர் ‘விளங்காய்’
வாய்பாடு கொண்டதாக இருக்கும்.
இந்தப் பாடலில் இந்த
இலக்கண அமைதிகளைக் கண்டுகொள்ளலாம்.
14 ஆம் நூற்றாண்டில் தஞ்சையிலிருந்து
அரசாண்ட விசயநகர மன்னன் திருமலைராயன் அவைக்களப் புலவர் அதிமதுரக் கவிராயர்
சொன்னபடியெல்லாம் பாடி வெற்றி கண்டவர் காளமேகப் புலவர்.

No comments:
Post a Comment