இவளுக்கு உதவ விரும்பினால், திருமணம்
செய்துகொண்டு உன் ஊருக்கு அழைத்துச்
செல் என்று தோழி தலைவனிடம்
கூறுகிறாள்.
இவள் கொடிச்சி. தளரும்
கொடி போன்றவள். அழகிய மூங்கில் போன்ற
தோளை உடையவள். பூவின் இதழ் போல
ஈரமான கண்களை உடையவள். காட்டில்
வாழும் கானவர் மக்களின் தங்கை.
- கானவர் – களிற்றின் முகத்தில் அம்பு எய்வர். அது வீழ்ந்ததும் அதன் காதை அறுத்து உணவாக்கிக் கொள்வர்.
தினை கொய்தாயிற்று. தினைக்
காவலுக்கு இவள் வராததால் உன்னைப்
பெற முடியவில்லை. ஏக்க நோயால் வருந்துகிறாள்.
நெற்றியில் தன் அழகை இழந்துவிட்டாள்.
அதனைப் பார்த்து ஊர் ஏதேதோ பேசுகிறது.
ஆகவே கொடிச்சியை உன்னுடன் கூட்டிச் செல்க.
பூண் அணிந்த மார்பை
உடையவனே! உன் ஊருக்குக் கூட்டிச்
செல்க.
- உன் ஊர் – மழை பொழியும் மலைச்சாரல். அங்கே குளுமையான நீர்ச் சுனை. தேன் உன்னும் சிறிய சிறகினை உடைய பறவை சுனையிலுள்ள மொட்டுகளின் வாயைத் திறக்கும். பின்னர் வேங்கை மரத்தில் உள்ள மலரில் அமர்ந்து ஊதும் (ஒலிக்கும்). பின் காந்தள் மலருக்கு வந்து உறங்கும். உறங்கிக்கொண்டே யானையின் மதநீரை மொய்க்கக் கனவு காணும். இப்படிப்பட்ட மலைநாட்டில் உன் ஊர் உள்ளது. அந்த ஊருக்கு இவளைக் கொண்டுசெல்க.
பாடல் சொல் பிரிப்புப்
பதிவு
திணை – குறிஞ்சி
ஏனலும் இறங்கு குரல்
இறுத்தன; நோய் மலிந்து,
ஆய்கவின் தொலைந்த, இவள் நுதலும்; நோக்கி
ஏதில மொழியும், இவ்
ஊரும்; ஆகலின்,
களிற்று முகம் திறந்த
கவுளுடைப் பகழி,
வால் நிணப் புகவின்,
கானவர் தங்கை 5
அம் பணை மென்
தோள் ஆய் இதழ் மழைக்
கண்
ஒல்கு இயற் கொடிச்சியை
நல்கினை ஆயின்,
கொண்டனை சென்மோ நுண்
பூண் மார்ப!
துளிதலைத் தலைஇய சாரல் நளி
சுனைக்
கூம்பு முகை அவிழ்த்த
குறுஞ் சிறைப் பறவை 10
வேங்கை விரி இணர்
ஊதி, காந்தள்
தேனுடைக் குவிகுலைத் துஞ்சி, யானை
இருங் கவுட் கடாஅம்
கனவும்,
பெருங் கல் வேலி,
நும் உறைவு இன் ஊர்க்கே.
தோழி தலைமகளை இடத்து
உய்த்து வந்து, தலைமகனை எதிர்ப்பட்டு
நின்று, வரைவு கடாயது.
தாயங்கண்ணனார் பாடல்
கி.மு. காலத்துப் பாடல்


No comments:
Post a Comment