Pages

Saturday, 11 June 2016

திருக்குறள் பாவுரை Tirukkural-Pavurai 120

120 தனிப் படர் மிகுதி
கா
காவடி
இரண்டு பக்கங்களும் சம எடை கொண்டிருக்கும்
அதுபோல
காம உணர்வும் ஆணுக்கும் பெண்ணுக்கும் சம அளவில் இருக்கவேண்டும்

காமன், ரதி

காமன், ரதி

காமன், ரதி

காமன், ரதி

படர் = நினைவு படர்ந்தோடுதல்

மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா
சிந்தியல் வெண்பாவாலான தாழிசை

ஆசைப் படுபவர்தன் ஆசை வலைவீழ்ந்தால்
பாசமாம் காமப் பழமதில் காழில்லை
நேசம் சுவைக்கும் நிலைத்து 1191       1
காழில் கனி = கொட்டை நீக்கிய பழம்
ஆசையில் வீழ்ந்தாரை ஆசைப்பட் டாரணைத்தால்
பாசமழை வாழ்வார் பயிர்செழிக்கப் பெய்ததுபோல்
பேச இனிக்கும் பெரிது 1192       2

காதலைக் கொண்டவரும் காதலில் வீழ்பவரும்
மோதா திணையின் முழுவாழ் வமைந்திருக்கும்
காதல் சிறப்புண்டு காண். 1193          3

காதலிப்பார் காதல் வலைவீழ்வார் யார்நல்லார்
காதல் வலைவீழாக் கல்நெஞ்சர் ஏனென்றால்
நோதல் வருமே நுழைந்து 1194      4

யான் காதல் கொண்டவர்க்கு என்மேல் அதுவின்றேல்
தான்காதல் கொண்டவர்க்குத் தானே அதுவருமோ
ஏன்காதல் வேண்டும் இவர்க்கு 1195     5

காவடியைத் தூக்கின் இருபால் கனம்சமனாம்
தாவிய காமம் தவிக்க மறுப்புண்டேல்
நோவே நுழையும் நுவல் 1196     6

மேனி படபடக்க வெந்துள்ளம் நொந்திருக்க
மானமிலாக் காமன் வளைத்தொருவர் மாட்டிருந்தால்
ஈனம் அவற்கே இயம்பு 1197           7
பருவரல் = பரபரப்பு – உடல்துன்பம் பைதல் = உளத்துன்பம்
யான்காதல் கொண்டவர்வாய் இன்சொல் பெறாதுலகில்
ஏன்வாழ வேண்டும்? இருப்பார் கொடியரே
மேன்மேலும் துன்பம் விழும் 1198           8

அன்றுநான் காதலித்த அன்புருவம் என்றனுக்கு
என்றுமே ஏதொன்றும் ஈயாமல் போனாலும்
வென்றார் நலம்வேண்டு வேன் 1199    9
தனிச்சொல்
எனவாங்கு
சுரிதகம்
காதலனோ காதலியோ காதலிலே கையிகந்து
மோதி மொழிந்த மனக்குமுறல் மொத்துவதால்
காதலலை மோதாத கல்நெஞ்சக் காரருக்குக் 
காதலைச் சொல்லிக் கரைந்தால் பயனில்லை
ஓதக் கடலை ஒறுத்தழித்தல் மேலாகும்
ஆதலினால் தன்போக்கில் காதல் அலைவேண்டா
மோதற்க என்றார் முறை 1200


இது திருக்குறள் பாவுரை
அடியேன் பொதுவன் அடிகள் இயற்றியது 2006

திருக்குறள் மூலம்
பரிமேலழகர் குறள் வைப்பு முறை
சொல் பிரிப்புப் பதிவு
இரண்டு அடிகள் ஒரே வரியில்

120 தனிப் படர் மிகுதி

1191. தாம் வீழ்வார் தம் வீழப்பெற்றவர் பெற்றாரே, \ காமத்துக் காழ் இல் கனி.
1192. வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால்-வீழ்வார்க்கு \ வீழ்வார் அளிக்கும் அளி.
1193. வீழுநர் வீழப்படுவார்க்கு அமையுமே, \ ‘வாழுநம்என்னும் செருக்கு.
1194. வீழப்படுவார், கெழீஇயிலர், தாம் வீழ்வார் \ வீழப்படாஅர் எனின்.
1195. நாம் காதல் கொண்டார் நமக்கு எவன் செய்பவோ \ தாம் காதல் கொள்ளாக்கடை.
1196. ஒருதலையான் இன்னாது, காமம்; காப் போல \ இருதலையானும் இனிது.
1197. பருவரலும் பைதலும் காணான்கொல் காமன் \ ஒருவர்கண் நின்று ஒழுகுவான்.
1198. வீழ்வாரின் இன் சொல் பெறாஅது, உலகத்து \ வாழ்வாரின் வன்கணார் இல்.
1199. நசைஇயார் நல்கார் எனினும், அவர்மாட்டு \ இசையும் இனிய, செவிக்கு.
1200. உறாஅர்க்கு உறு நோய் உரைப்பாய்-கடலைச் \ செறாஅஅய்! வாழிய நெஞ்சு.

திருக்குறள் விளக்கம்
திருக்குறள் ஆங்கிலத்தில்

No comments:

Post a Comment