Pages

Saturday, 11 June 2016

திருக்குறள் பாவுரை Tirukkural-Pavurai 119

119 பசப்புறு பருவரல்
ஒளிரும் விளக்கு \ தூண்டுதல்
 
எரியும் அகல் விளக்கு - மேல் துளை எண்ணெய் ஊற்றும் இடம்

இருதிரி விளக்கு - எண்ணெய் நிற்குமிடம் தெரிகிறது

ஒரு திரி விளக்கு - எண்ணெய் நிற்குமிடத்தில் கலை

ஒரு திரி விளக்கு - எண்ணெய் நிற்குமிடத்தில் கலை

வாயில் எண்ணெய் ஊற்ற வேண்டும். வயிற்றுக்குள் எண்ணெய் நிற்கும். காலுக்கு இடையில் உள்ள துளையில் திரி. அதிகமாக எண்ணெய் ஊற்றினால், நுரையீரலில் வழியும்.

விளக்கு அவிந்தால் இருள் வருவது போல, தழுவுதலை அவன் விலக்கியவுடன் பசப்பு பாய்ந்துவிடும்

பசப்பு, பசலை என்பன உடலில் தோன்றும் ஒருவகை மாற்றம்.
இரண்டு சொற்களும் ஒரே பொருளை உணர்த்துவன.

பசந்த, பசக்க, பசந்தாள் – என்று இச் சொல்
வினை வடிவிலும் இவ் வதிகாரத்தில் கையாளப் பட்டுள்ளது.

நோயும், பசலையும் – என்று கூறப்படுவதால்
பசலை என்பது நோய் அன்று என்பது தெளிவாகிறது.

பருவ காலத்தில் உடலில் தனிப் பொலிவு தோன்றும்.
உடலுறவுக்குப் பின் அது மேலும் பொலிவுறும்.
காதலரைப் பிரிந்து ஏங்கும்போது உடலின் கட்டழகு குன்றும்.
உடல் இளைக்கும்.
இதனைப் பசலை அல்லது பசப்பு என்று கூறினர்.

முதல் குழந்தை கைப்பிள்ளையாக இருக்கும்போதே
மற்றொரு குழந்தை பிறந்துவிட்டால்
இரண்டாவது குழந்தை சவலைப் பிள்ளை.
அக்குழந்தை தாயின் பாசத்துக்கு ஏங்கும்.

அதுபோல காதலனின் துணை கிட்டாதா என்று ஏங்கும்
காதலியின் ஏக்கத்தைப் பசலை என்று வழங்கினரோ என்று எண்ண வேண்டியுள்ளது.
காரணம், பிரிந்தவர் மேனியில் பச்சை தோன்றுவது இயல்பாகத் தெரியவில்லை.

செய்திகளை மூடி மறைப்பதைப் – பசப்புகிறாள் அந்தக் கள்ளி
என்று சொல்லக் கேட்டிருக்கிறோம்.
காதலன் பிரிந்த கவலையை அவள் பசப்பி மறைத்தாள் போலும்.
இப்படிப் பாவனையால் பசக்கும் (பாசாங்கு செய்யும்)
அல்லது பசப்பும் (நடிக்கும்)
மேனியைப் பசலை, பசப்பு என்னும் சொற்களால் குறிப்பிட்டனர் போலும்.

பசந்த பண்பு,
மேனிமேல் ஊரும் பசப்பு,
என்னும் தொடர்கள்
காதலியின் மேனியில் தோன்றும் மாற்றத்தை குறிப்பிடுகின்றன என்பது தெளிவு.

மாற்றம் இளைப்பைக் குறிக்கிறது.
இளங்குழந்தை = பச்சைக் குழந்தை – இளைப்பு – பசப்பு – இளமை = பசலை
இப்படி இந்தச் சொற்கள் தோன்றி யிருக்குமோ என்று எண்ணத் தூண்டுகிறது.

உடல் நிறத்தை மாந்தளிர் போன்ற மாமை நிறம் என்றும்,
பசலை நிறத்தை எரிமலர் பீர்க்கம் பூ போன்ற நிறம் என்றும் அகநானூறு குறிப்பிடுகின்றது. – 45. எண்ணெய் ஊற்றி அகலில் எரியும் தீ மஞ்சள் நிறமாகத் தோன்றும்.
பீர்க்கம் பூவும் மஞ்சள் நிறம்.
எனவே பசலை என்பது மேனியில் தோன்றும் மஞ்சள் நிறம் எனத் தெரிகிறது.

கொன்றையம் பசு வீ நம்போல் பசக்கும்
என்று தலைவி கூறுவதாகக் குறுந்தொகைப் பாடல் குறிப்பிடுகின்றது. – 183.
கொன்றைப் பூவும் மஞ்சள் நிறம்.
இது மேலே சொன்ன கருத்தை வலியுறுத்துகின்றது.

மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா
தாழிசை
அன்றென்னை அணைக்கவர அகன்றொதுங்கி னேன் பசப்போ
இன்றென்னைத் தின்கிறதே யார்க்குரைப்பேன் அம்மம்ம 1181   1
அவர்விலகிச் சென்றாலும் அளித்துள்ளார் எனப்பசப்பு
கவலைபாய் என்மேனி கவ்வியதே அம்மம்ம 1182  2
மேனியது மெல்லழகும் வெட்கமும் கொண்ட அவர்
தானமாய்ப் பசலை, நோய் தந்தகன்றார் அம்மம்ம 1183   3
மனமெல்லாம் அவர்நினைவு வாயெல்லாம் அவர்திறமை
வனப்பெல்லாம் பசப்பூர்ந்த மாயமென்ன அம்மம்ம 1184   4
இங்கில்லை அங்கில்லை இடையிலதோ செல்கின்றார்
பொங்கிவரும் பசப்பழிவு பொல்லாத தம்மம்ம 1185 5
ஒளிபோன உடனேயே உள்ளேறும் இருளைப்போல்
அளியணைப்பு விலகியதும் பசப்பேறும் அம்மம்ம 1186         6
அணைத்திருந்தேன் புரண்டுவிட்டேன் அவ்வளவில் பசப்பள்ளி
உணத்தொடங்கி விட்டதுவே உருகுகிறேன் அம்மம்ம 1187    7
யான்பசந்தேன் என்றுரைப்பார் எல்லாரும் சொல்லாரோ
தான்துறந்த தன்மையினைச் சற்றெண்ணி அம்மம்ம 1188    8
ஆசைகொளச் செய்த அவர் அகன்றுநல மில்லாரேல்
ஏசட்டும் பசப்பேறி எனைத்தின்க அம்மம்ம 1189          9
தனிச்சொல்
அம்மம்மா
சுரிதகம்
பழியவர்மேல் செல்லாதேல் பசக்கட்டும் மேனியெலாம்
இழிவென்மேல் இருக்கட்டும் என்கின்றாள் பொன்பசலை
பழிநிலையா? பாராட்டா? பார் 1190     

இது திருக்குறள் பாவுரை
அடியேன் பொதுவன் அடிகள் இயற்றியது 2006

திருக்குறள் மூலம்
பரிமேலழகர் குறள் வைப்பு முறை
சொல் பிரிப்புப் பதிவு
இரண்டு அடிகள் ஒரே வரியில்

119 பசப்பு உறு பருவரல்

118.  நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன்; பசந்த என் \ பண்பு யார்க்கு உரைக்கோ, பிற.
1182. அவர் தந்தார் என்னும் தகையால் இவர்தந்து, என் \ மேனிமேல் ஊரும், பசப்பு.
1183. சாயலும் நாணும் அவர் கொண்டார் கைம்மாறா \ நோயும் பசலையும் தந்து.
1184. உள்ளுவன்மன் யான்; உரைப்பது அவர்திறமால்; \ கள்ளம் பிறவோ, பசப்பு.
1185. உவக்காண், எம் காதலர் செல்வார்; இவக்காண், என் \ மேனி பசப்பு ஊர்வது.
1186. விளக்கு அற்றம் பார்க்கும் இருளேபோல், கொண்கன் \ முயக்கு அற்றம் பார்க்கும், பசப்பு.
1187. புல்லிக் கிடந்தேன், புடைபெயர்ந்தேன்; அவ் அளவில், \ அள்ளிக்கொள் அற்றே, பசப்பு.
1188. 'பசந்தாள் இவள்' என்பது அல்லால், ‘இவளைத் \ துறந்தார் அவர்என்பார் இல்.
1189. பசக்கமன் பட்டாங்கு, என் மேனி நயப்பித்தார் \ நல் நிலையர் ஆவர் எனின்!.
1190. பசப்பு எனப் பேர் பெறுதல் நன்றே நயப்பித்தார் \ நல்காமை தூற்றார் எனின்.

திருக்குறள் விளக்கம்
திருக்குறள் ஆங்கிலத்தில்

No comments:

Post a Comment