Pages

Tuesday, 3 May 2016

நற்றிணை Natrinai 109

இரைக்கும் வாடை


தலைவி தன் தோழியிடம் தன் கலக்கத்துக்குப் புது விளக்கம் தருகிறாள்.

“நாம் ஒன்று சேர்வோம்” என்று அவர் சொன்னார். 
அது பழமையான நட்பு. 
இந்த நட்புறவுடன் காதலர் சென்றுள்ளார். 

அதனால் கலக்கமுற்றுப் பித்தாகி, நெற்றி-நிறம் மாறிய நிலையில் இருக்கிறாயா, என்று கேட்கிறாய்.

அணிகலன்கள் புனைந்துகொண்டு, எனக்கும் புனைந்துவிடும் நல்லவளே, சொல்கிறேன் கேள்.

சொல்லமுடியாத அளவுக்கு வாடைக்காற்று-தான் என் துன்பத்தை ‘இம்’ என்று வாரி இரைக்கிறது (தூற்றுகிறது).

இருளில், வாடைக்காற்று வீசும் நீர்த்துளியில், தலையில் கூழைக் கயிற்றால் கட்டிப் பிணிக்கப்பட்டிருக்கும் பசு வருந்துவது போல நான் வருந்திக்கொண்டிருக்கிறேன். 

அவ்வளவுதான். 

பகல் மடிந்த பொழுதில் தனியே இருக்கிறேனே! என்ன செய்வேன்.


(சொல் பிரிப்புப் பதிவு)
பாடல் 109 பாலை

ஒன்றுதும் என்ற தொன்று படு நட்பின் 
காதலர் அகன்றெனக் கலங்கிப் பேதுற்று 
அன்னவோ இந் நன்னுதல் நிலை என 
வினவல் ஆனாப் புனையிழை கேள் இனி 
உரைக்கல் ஆகா எவ்வம் இம்மென 
இரைக்கும் வாடை இருள் கூர் பொழுதில் 
துளியுடைத் தொழுவின் துணிதல் அற்றத்து 
உச்சிக் கட்டிய கூழை ஆவின் 
நிலை என ஒருவேன் ஆகி 
உலமர கழியும் இப் பகல் மடி பொழுதே

பிரிவிடை ஆற்றாளாய தலைமகளது நிலைகண்ட தோழிக்குத் தலைமகள் சொல்லியது
மீளிப் பெரும்பதுமனார் பாடல்  

கி.மு. 2 ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய பாடல்

கூழைக் கயிற்றில் கட்டப்பட்டிருக்கும் பசு

2 comments:

  1. Sir your notes very useful ah irukku sir.... thank you so much sir

    ReplyDelete
    Replies
    1. உழைப்புக்குத் தரும் ஊக்கம்

      Delete