![]() |
| சொக்கன் சிவன் |
கடம்பவனம் கோயிலில்
குடி கொண்டுள்ள சொக்கநாதப் பெருமானுக்குக் கண்ணன் வேறு இல்லை. கண்ணனே தன் கண்
ஒன்றைச் சொக்கநாதனுக்குக் கொடுத்து அவன் உடம்பில் பாதி உடம்பாகிக் கிடக்கிறான்.
சிவனைச் சுமக்கும் எருதாகவும் இருக்கிறான். சிவன் முப்புரம் எரித்தபோது அம்பாகப்
பயன்பட்டான். சிவனின் மனைவியாகவும் இருக்கிறான்.
பாடல்
கடம்பவனச் சொக்கருக்குக் கண்ணன் றான்வேறோ
இடம்பெரிய கண்ணொன்றை யீந்தான் –உடம்பதனில்
செம்பாதி யானான் சுமக்கவெரு தானான்
அம்பானான் தேவியு மானான் .(132)
கடம்பவனச் சொக்கருக்குக் கண்ணன் தான் வேறோ, இடம் பெரிய கண் ஒன்றை ஈந்தான், உடம்பதனில் செம்பாதி ஆனான், சுமக்க எருது ஆனான், அம்பு ஆனான், தேவியும் ஆனான் .
14 ஆம் நூற்றாண்டில் தஞ்சையிலிருந்து
அரசாண்ட விசயநகர மன்னன் திருமலைராயன் அவைக்களப் புலவர் அதிமதுரக் கவிராயர்
சொன்னபடியெல்லாம் பாடி வெற்றி கண்டவர் காளமேகப் புலவர்.

No comments:
Post a Comment