கையாடு வட்டு - கையால் தட்டி விளையாடும் பந்து
இன்ப உதவி செய்ய இடர்பட்டு இரவில் வரலாமா,
தலையின் வினா.
1
நாங்கள் காதலில் கலந்தவர்கள். எனவே, ஒருவர் துன்பத்தை மற்றொருவர் போக்க வேண்டும். இது எல்லாருக்கும் ஒத்த நற்செயல்தான். அதற்காக அவர் உயிரைக் கொல்லும் விலங்குகள் நடமாடும் காட்டு வழியில் இரவில் தனியாக வரவேண்டியதில்லையே, என்று தலைவி, தொலைவில் காத்திருக்கும் தலைவனுக்குக் கேட்குமாறு தன் தோழியிடம் கூறுகிறாள்.
2
மழை பொழியும் நள்ளிரவு. மலையே சிதறுவது போல, பளிங்கு போன்ற மழைக்கட்டிகள் யானையின் முகத்தில் சொரிகின்றன. அவை பாறையில் சிதறி விழுகின்றன. சினம் கொண்ட மழைமேகங்கள் மின்னுகின்றன. எரியும் கொள்ளிக் கட்டையை வீசி எறிவது போல மின்னுகின்றன. இப்படிப் பெருமழை பொழிந்த நள்ளிரவு இது.
3
உயிரைக் கொல்லும் வலிமை மிக்க விலங்குகள் நடமாடும் இருளில், தனியே, அந்த அருளாளன் நாள்தோறும் வருகிறான். தோழி இதைக் கேள்.
4
பாம்பு படமெடுத்து ஆடுவது போலப் புள்ளிமயில் ஆடுகிறது. பூத்திருக்கும் காந்தள் கொடி காயாம் பூப் புதரில் ஏறிப் படர்ந்திருக்கிறது. கைவிரல்கள் போன்ற இதழ்களுடன் காந்தள் பூ பூத்திருக்கிறது. அந்தப் பூவில் தேன் உண்ணும் வண்டு அமர்ந்திருக்கிறது. இது பந்தாடும் மகளிர் கையில் இருக்கும் பந்து போலத் தோற்றமளிக்கிறது. இப்படிப்பட்ட மலைநிலத்துக்குத் தலைவன் அவன்.
பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை – குறிஞ்சி
1
புணர்ந்தோர் புன்கண் அருளலும் உணர்ந்தோர்க்கு
ஒத்தன்று
மன்னால்! எவன்கொல்? முத்தம்
2
வரைமுதல் சிதறிய வை போல், யானைப்
புகர் முகம் பொருத புது நீர் ஆலி
பளிங்கு சொரிவது போல் பாறை வரிப்ப, 5
கார் கதம்பட்ட கண் அகன் விசும்பின்
விடுபொறி ஞெகிழியின் கொடி பட மின்னி,
படு மழை பொழிந்த பானாட் கங்குல்,
3
ஆர் உயிர்த் துப்பின் கோள் மா வழங்கும்
இருளிடைத் தமியன் வருதல் யாவதும் 10
அருளான் வாழி, தோழி! அல்கல்
4
விரவுப் பொறி மஞ்ஞை வெரீஇ, அரவின்
அணங்குடை அருந் தலை பை விரிப்பவைபோல்,
காயா மென் சினை தோய நீடிப்
பல் துடுப்பு எடுத்த அலங்கு குலைக் காந்தள் 15
அணி மலர் நறுந் தாது ஊதும் தும்பி
கை ஆடு வட்டின் தோன்றும்
மை ஆடு சென்னிய மலைகிழவோனே.
தலைமகன் சிறைப்புறத்தானாக, தலைமகட்குச்
சொல்லுவாளாய், தோழி சொல்லியது.
தங்கால் பொற்கொல்லனார்
கி.மு.
காலத்துப் பாடல்

No comments:
Post a Comment