திருமால் விடை (காளை) உருவம் தாங்கி, சிவனைச்
சுமக்கின்றார் என்பது ஒரு புராணக் கதை. அதன்படி திருமாலின் செயல்களை, சிவன் ஏறும்
விடை செய்ததாக இந்தப் பாடல் கூறுகிறது.
![]() |
| தூணில் தோன்றிய அரி, நரசிம்ம அவதாரம் |
![]() |
| மீன் அவதாரம் |
உலகத்தைப் காலால் அளக்கும்.
ஆயிரம் பூ போட்டு, சிவனைப் பூசனை செய்யும்போது
பூ ஒன்று குறைந்ததால் தன் கண்களில் ஒன்றைப் பிடுங்கிப் போட்டுப் பூசை செய்யும்.
சேல் மீனை அங்கமாகக் கொள்ளும். மச்சாவதாரம்
மாடத்துத் தூணில் சிங்கம் ஆகும். நரசிம்மம்
பால் நீர்க் கடலில் துயில் கொள்ளும்.
பாண்டவர் ஐவருக்காக, தூது செல்லும்.
பாடல்
காலாற் படியளக்குங் கண்ணிடந்து பூசிக்கும்
சேலாங்க மடமாஞ் சிங்கமாம் –பாலாகும்
ஆழியப்பி
லேதுயிலு மைவர்க்குத் தூதாகும்
வீழியப்ப ரேறும் விடை .(131)
காலால் படி அளக்கும், கண் இடந்து பூசிக்கும், சேலாங்க மடம் ஆம், சிங்கம் ஆம், பால் ஆகும் ஆழி அப்பிலே துயிலும், ஐவர்க்குத் தூது ஆகும், வீழியப்பர் ஏறும் விடை .
14 ஆம் நூற்றாண்டில் தஞ்சையிலிருந்து
அரசாண்ட விசயநகர மன்னன் திருமலைராயன் அவைக்களப் புலவர் அதிமதுரக் கவிராயர்
சொன்னபடியெல்லாம் பாடி வெற்றி கண்டவர் காளமேகப் புலவர்.


No comments:
Post a Comment