தண்ணுமையை அடிப்பது போல் அவள் தன் வயிற்றில் அடித்துக்கொள்ளட்டும்
பரத்தை ஒருத்தி தன் தோழி முன்னிலையில் உறுதிமொழி
எடுத்துக்கொள்கிளாள்.
1
எரியும் நெருப்பு பூத்துக் கிடப்பது போலப் பொய்கையில் தாமரை பூத்திருக்கும். பொரியைப் பொய்கையில் கொட்டியது போல, சிறுமீன்கள் பசுமையான இலைகளைத் தின்னுவதற்காக அங்கே திரியும். சிறகு ஒடிந்த நாரை மீன் இரையைக் கொள்வதற்காக அங்கே மெல்ல மெல்ல ஆசைந்து செல்லும். இப்படப்பட்ட துறை கொண்ட ஊரின் தலைவன் அவன்.
2
அந்த ஊரனின் மனைவி, தன் கொழுநனை என்னோடு சேர்த்துப் பேசி அவனோடு பிணக்குப் போட்டுக்கொள்கிறாள் என்கின்றனர். எனக்கும் அவனுக்கும் எந்த உறவும் இல்லை. இருப்பினும் இருப்பதாகக் காட்டி அவளைக் கொஞ்சம் மிரட்டிவிட்டு வரலாம் என்று நினைக்கிறேன். செல்லலாமா, தோழி, என்கிகிறாள், பரத்தை.
3
அப்படி நான் அவளைச் செய்யாவிட்டால், என் வயிறு என் அடி பட்டு வலிக்கட்டும். வாள்-படை கொண்ட அரசன் ‘கொற்றச் செழியன்’ வெள்ளை இல்லாத போர்த்தொழில் கற்றவன் (கற்பு). அவன் போரில் பகைவரை அழிக்கும்போதெல்லாம், பாணர் தம் தண்ணுமைப் பறையை முழக்குவர். அவர்கள் முழக்கும்போது பறை அடிப்பது போல அவள் தன் வயிற்றில் அடித்துக்கொண்டு துன்புறட்டும். – இது பரத்தை எடுத்துக்கொண்ட உறுதிமொழி.
அகநானூறு 13 அடிகளைச் சிறுமையாகக்
கொண்டது என்பதற்கு இந்தப் பாடல் ஓர் எடுத்துக்காட்டு.
பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை – மருதம்
1
எரி அகைந்தன்ன தாமரைப் பழனத்து,
பொரி அகைந்தன்ன பொங்கு பல் சிறு மீன்,
வெறி கொள் பாசடை, உணீஇயர், பைப்பயப்
பறை தபு முது சிரல் அசைபு வந்து இருக்கும்
துறைகேழ் ஊரன் பெண்டு தன் கொழுநனை 5
2
நம்மொடு புலக்கும் என்ப நாம் அது
செய்யாம்
ஆயினும், உய்யாமையின்,
செறிதொடி தெளிர்ப்ப வீசி, சிறிது அவண்
உலமந்து வருகம் சென்மோ தோழி!
3
ஒளிறு வாட் தானைக் கொற்றச் செழியன் 10
வெளிறு இல் கற்பின் மண்டு அமர் அடுதொறும்
களிறு பெறு வல்சிப் பாணன் எறியும்
தண்ணுமைக் கண்ணின் அலைஇயர், தன் வயிறே.
தலைமகள் தன்னைப் புறங்கூறினாளாகக்
கேட்ட பரத்தை, அவட்குப் பாங்காயினார்
கேட்ப, சொல்லியது.
ஆலங்குடி வங்கனார் பாடல்
கி.மு.
காலத்துப் பாடல்

No comments:
Post a Comment