![]() |
| சிவன் முக்கணான் முக்கண் பெருமான் |
- ஆயனுக்கு இருகண்
- ஆதிசிவனுக்குக் கண் மூன்றாம்
- மாயனுக்கு ஆகும் மண் .
- சங்கரற்கு செம் கையிலே மான் மழுவாம்
- மாலுக்கு நேயமுடன் சங்கு ஆழி தான்
- மங்கை இடத் தாற்கு ஆலம் ஆம்
என்று கொண்டுகூட்டிப் பொருள் கொள்ளவேண்டிய பாடல்
இது.
கொண்டுகூட்டுப் பொருள்கோள் என்று இதனைக்
கூறுவர்.
பாடல்
ஆயனுக்குக்
கண்மூன்றா மாதிசிவ னுக்கிருகண்
மாயனுக்குச் செங்கையிலே மான்மழுவாம் – நேயமுடன்
சங்கரற்குச் சங்காழி தான்மாலுக் காலமாம்
மங்கையிடத்
தாற்காகு மண் .(124)
ஆயனுக்குக் கண் மூன்றாம் ஆதிசிவனுக்கு இருகண் மாயனுக்குச் செம் கையிலே மான் மழுவாம் நேயமுடன் சங்கரற்குச் சங்கு ஆழி தான் மாலுக்கு ஆலம் ஆம் மங்கை இடத் தாற்கு
ஆகும் மண் .
14 ஆம் நூற்றாண்டில் தஞ்சையிலிருந்து
அரசாண்ட விசயநகர மன்னன் திருமலைராயன் அவைக்களப் புலவர் அதிமதுரக் கவிராயர்
சொன்னபடியெல்லாம் பாடி வெற்றி கண்டவர் காளமேகப் புலவர்.

No comments:
Post a Comment