Pages

Wednesday, 27 April 2016

ஊழ் destiny

ஊழ் என்றால் என்ன? இலக்கியலகள் இந்தச் சொல்லை எவ்வாறு கையாளுகின்றன?
முறை

  • முலை ஞெமுங்க பல் ஊழ் அடைதல் (அகம் 58)
  • விசும்பில் ஊழி ஊழ் ஊழ் செல்ல (பரிபாடல் 2)
  • தழலும் தட்டையும் குளிரும் … ஊழ் ஊழ் வாங்கி, முழக்கல் (குறிஞ்சிப்பாட்டு 44)
முறையாக வருவது
  • ஊழின் பெருவலி யா உள | ஆகு ஊழ் | போகு ஊழ் | (திருக்குறள்)
பூத்தல்
  • இணர் ஊழ்த்தும் நாறா மலர் – திருக்குறள்
  • மௌவல் முகை ஊழ்ப்ப (கலித்தொகை 27-4)
  • மௌவல் ஊழ்முகை அவிழ (நற்றிணை 115-6)
  • பாதிரி ஊழ் குகை அவிழ (புறம் 399)
  • ஊழ் இணர் நறவம் (பரிபாடல் 19-78)
விளைதல்
  • இறுகு ஊழ் உற்று அலமரும் (மலைபடுகடாம் அடி 133)
உதிரல்
  • ஊழ் மலர் (மலைபடுகடாம் அடி 130)
வழுக்கும் பகுதி
  • ஊழ் அடி முட்டம் (குறிஞ்சிப்பாட்டு அடி 258)
எல்லை
  • கானம் ஊழ் இறந்து மான் ஓடும் (மலைபடுகடாம் அடி 405)
தன்னை அறியாமல் கால் செல்லல்
  • ஊழ் இழிபு (மலைபடுகடாம் அடி 288) ஊழ் இறந்து மலைபடுகடாம் அடி 253)
இயல்பு 
  • குயில் ஊழ் கொள்பு கூவ (மலைபடுகடாம் அடி 8)



இந்தப் பூக்களின் நிறமும் உருவும் ஊழ் 

No comments:

Post a Comment