Pages

Friday, 11 December 2015

மூதுரை 3 Mudurai 3

இளமையில் வறுமை

இன்னா இளமை வறுமைவந் தெய்தியக்கால்
இன்னா அளவி லினியவும்-இன்னாத
நாளல்லா நாட்பூத்த நன்மலரும்போலுமே
ஆளில்லா மங்கைக் கழகு. (3)

வறுமை வந்துவிட்டால் எதையும் செய்யும் இளமைப் பருவமே துன்பப்படும். அளவில்லாத இன்பம் தரும் பொருள்களும் துன்பம் தரும் பொருள்களாக மாறிவிடும்.
சூடும் நாள் இல்லாதபோது பூத்துக் கிடக்கும் மலரால் என்ன பயன்? அதுபோல அனுபவிக்கும் ஆண் இல்லாத பெண்ணின் அழகால் என்ன பயன்?
ஆண் இல்லாத பெண்ணின் அழகால் பயன் இல்லை
12 ஆம் நூற்றாண்டு ஔவையார் பாடிய மூதுரை (வாக்குண்டாம்)

No comments:

Post a Comment