பருவத்தே பயிர்செய் 22
ஔவையார்
பருவம் என்பது பருவ காலம்
இளவேனில், முதுவேனில், கார், கூதிர் (குளிர்), முன்பனி, பின்பனி – என்று தமிழ்நாட்டில் ஆறு பருவகாலங்கள் உண்டு. இந்தப் பருவநிலைகளைக் கருத்தில் கொண்டு அதற்கு ஏற்ற பயிர் வகைகளை நிலத்தில் வெள்ளாமை (வேளாண்மை) செய்யவேண்டும்.
Cultivate in season
பருவம் என்பது இளமைப் பருவம்
பருவப்பெண் என்னும் என்னும் சொல்லில் தெரியவரும் பருவம் இது.
பண்புகளைப் பதியம் போடவேண்டிய பருவம் இது.
இந்தப் பருவத்தில் நற்பண்புகளைப் பயிர்செய்ய வேண்டும்.
![]() |
| நாற்றுப் பிடுங்குதல் மாற்றுத் திறனாளியின் மாளா உழைப்பு |
நெற்பயிர் நாற்றுகளைப் பிடுங்கி நடுவார்கள்.
பயிரைப் பருவத்தில் பிடுங்கி நடவேண்டும்.
குறைந்த கால நாற்றுகளையோ, காலம் கடந்த நாற்றுகளையோ பிடுங்கி நட்டால் விளைச்சல் குறையும்.
எனவே பருவத்தில் நாற்றுகளை (நற்பண்பு நாற்றுகளை)ப் பயிர்செய்ய வேண்டும்.

No comments:
Post a Comment