Pages

Sunday, 6 December 2015

அகநானூறு Agananuru 50

வாராதோர் நமக்கு யார்


முன்பெல்லாம் சேர்ப்பன் இவளிடம் வராத நாள்இல்லை. இப்போது இவள் காமத்தோடுகண்ணீர் வடிக்கிளாள். பாண! நான் என்னசெய்வேன். நீ அவன் ஊருக்குமறைவாகச் சென்று நிலைமையைச் சொன்னால்என்ன? – தோழி தன் தலைவியைப்பற்றிப் பாணனிடம் இவ்வாறு கூறுகிறாள்.

இதன் சுளை

1
கடலலை ஓய்ந்தாலும், மீன்பிடிக்கத் தோணியில் யாரும் செல்லாமல் இருந்தாலும், கழிமுகத் துறைகளில் பெரிய பெரிய மீன்புரண்டாலும், நாள்தோறும் வருவதைப் பார்த்துக் கொடிய வாயையுடைய பெண்டிர் சாடைமாடையாகப் பேசினாலும், எதைப் பற்றியும் கவலைப்படாமல் சேர்ப்பன் இவள் இருக்குமிடத்துக்கு வருவான். அணிகலன் பூட்டிய தேரில் வருவான். ஆரவாரத் தேர்ப் பாணியோடு வருவான். பகலிலும் நம்மை விட்டுப் பிரியமாட்டான். நம்முடன் பயின்று விளையாடுவான். இப்படிச் செய்யும் பனிநீர்ச் சேர்ப்பனுக்கு இப்போது என்னவாயிற்று?
2
சேர்ந்திருக்க வேண்டிய காம வெள்ளத்தில்பிரிந்து நீந்திக்கொண்டிருக்கிறாள். ‘வராதவர் நமக்கு யார்?’ என்று இவள் எண்ணவில்லை. பாண! நீயும்வராதவர் நமக்கு யார்?’ என்று எண்ணக்கூடாது. அவனது வளம் மிக்க ஊருக்குச் செல்ல வேண்டும். முதியோர் வாழும் மூதூருக்குச் செல்லவேண்டும். உன்னை அடையாளம் தொரியாமல் மறைத்துக்கொண்டு செல்ல வேண்டும். சென்று இவள் நிலைமையைச் சொல்லிவிட்டு வரவேண்டும். பாண! அப்படிச் சொல்லிவிட்டு வந்தால் என்ன
3
வீட்டுமனையில் வளர்ந்திருக்கும் பனைமரத்தில் வாழும் ஆண், பெண் அன்றில் பறவைகள், துணைப்பறவை எது பிரிந்தாலும் மற்றொன்று தூங்காமல் இருக்கும்என்று சொல்லிக்கொண்டு இவள் கண் கொள்ளாத நீரை வடிக்கிறாள். இவளது ஒளி பொருந்திய நெற்றியை நான் பார்க்க வேண்டுமே. என்ன செய்வேன்.

பாடல்
சொல்பிரிப்புப் பதிவு
திணை - நெய்தல்
1
கடல்பாடு அவிந்து, தோணி நீங்கி,
நெடு நீர் இருங்கழிக் கடுமீன் கலிப்பினும்;
வெவ் வாய்ப் பெண்டிர்கௌவை தூற்றினும்;
மாண் இழை நெடுந்தேர் பாணி நிற்ப,
பகலும் நம்வயின் அகலான்ஆகிப்       5
பயின்றுவரும் மன்னே, பனி நீர்ச்சேர்ப்பன்,
2
இனியே, மணப்பருங் காமம்தணப்ப நீந்தி,
'வாராதோர் நமக்கு யாஅர்?' என்னாது,
மல்லல் மூதூர் மறையினைசென்று,
சொல்லின் எவனோ பாண! 'எல்லி        10
3
மனை சேர் பெண்ணைமடி வாய் அன்றில்
துணை ஒன்று பிரியினும்துஞ்சாகாண்' என,
கண் நிறை நீர்கொடு கரக்கும்,
ஒண் நுதல் அரிவை, 'யான் என்செய்கோ?' எனவே.              

தோழி பாணனுக்குச் சொல்லியது.
கருவூர்ப் பூதஞ்சாத்தனார் பாடியது

On those days he, the man of littoral track used to come every day and stay playing with us. Even the waves in sea are in peace, the fisher-men would not row boats and big fishes play in lagoon he wouldn’t fail to come. He will come in his chariot decorated. But now his behavior is not like that. He didn’t come at all. Now she suffers in her love-sick. She looks at the love-birds on Palmyra tree in the house promises. She thinks the birds’ character not being alone happy, if one bird parts. “What shall I do for her?” The friend-maid of the heroine lady says these words to a musician a mediator. She asked him “Why not you go his village in disguise and convey her position in person?” 

A poem by: PutanjSattanar
The text is belongs to second century B.C. or earlier.  

அன்றில்

No comments:

Post a Comment